சார்பெழுத்துகள்
முதலெழுத்துகள் :
- உயிரெழுத்துக்கள் 12+மெய் எழுத்துக்கள் 18 தனித்து இயங்கி முதன்மை பெறுவதால் முதலெழுத்து .
சார்பெழுத்துகள் :
- முதலெழுத்தை சார்ந்து வரும் எழுத்துக்கள்சார்பெழுத்துகள் 10 வகைப்படும் :
- உயிர் மெய்(216)
- ஆய்தம் (8)
- உயிரளபெடை (21)
- ஒற்றளபெடை (42)
- குற்றியலுகரம் (36)
- குற்றியலிகரம் (37)
- ஐகார குறுக்கம் (3)
- ஓளகாரக்குறுக்கம்(1)
- மகரக்குறுக்கம் (3)
- ஆயுதக்குறுக்கம் (2)
2. ஆய்தம் :
- 'ஃ' - முப்புள்ளி (அ) முப்பாற்புள்ளி என்பர் . உயிரோடும் , மெய்யோடும் சேராமல் வருவதால் 'தனிநிலை ' எனப்படும் .
3. உயிரளபெடை:
( * - அளபெடை - ஒரு சொல்லின் முதலிலும், இடையிலும் , இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துக்கள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும். அளபு =மாத்திரை ; எடை =எடுத்தல் )
- ஓசையை நிறைவு செய்ய உயிர் நெடில் எழுத்துகள் அளபெடுக்கும் .
- ஐ -- காரத்திற்கு இ -காரமும் அளபெடுக்கும் .
- ஓள -- காரத்திற்கு உ -காரமும் அளபெடுக்கும் .
- செய்யுளிசை அளபெடை(அ ) இசைநிறை அளபெடை:
- ஈரசை கொண்ட சீர்களில் மட்டும் வரும்
- மொழியின் முதலிலும் , இடையிலும் , இறுதியிலும் நின்ற உயிர் நெடில் எழுத்துகள் எழும் , தமக்கு இனமாகிய குறில் எழுத்துகளைப் பெற்று உரிய மாத்திரையில் இருந்து மிகுந்து ஒலிக்கும் .
- எ ,கா : கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
- விடாஅ விழையும் உலகு
- மூவசை கொண்ட சீர்களில் மட்டும் வரும்
- இனிய ஓசைக்காக அளபெடுத்தலை இன்னிசை அளபெடை
எடுப்பதூஉம் எல்லாம் மழை
- இ -- என்னும் எழுத்தில் முடியும்
- ஒரு சொல் மற்றோரு சொல்லாகப் பொருள் படவரும் அளபெடை
சொல்லிசை அளபெடை - பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது சொல்லிசை அளபெடை
எ .கா : குடிதழிஇக் கோல்ஒச்சும் மாநில மன்னன
அடிதழிஇ நிற்கும் உலகு
4.ஒற்றளபெடை :
எ .கா :எங்ங்கிறைவனள னென்பாய்
- செய்யுளில் ஓசை குறைந்தால் மெய் எழுத்துக்கள் அளபெடுக்கும் .
வெ ஃஃ குவார்க் கில்லை வீடு
- (அளபெடுக்கும் 10 மெய் எழுத்துக்கள் -- ங், ஞ் , ண் , ம் ,ன் , வ் , ய் , ல் ,ள், ஃ)
5.குற்றியலுகரம் :
- குற்றியலுகரம் = குறுமை + இயல் +உகரம்
- சொல்லின் இறுதியில் உகரம் ( - உ) தனக்குரிய மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்
- ஆறு வகைப்படும் :
- நெடில் தொடர்க் குற்றியலுகரம்:
- உயிர் நெடில் , உயிர் மெய் நெட்டெழுத்து அடுத்து வரும் உகரமேறிய வல்லின எழுத்துக்கள் நெடில்தொடர்க் குற்றியலுகரம்
- எ .கா : நாகு ,காசு , ஆடு , மாது , ஆறு (ஈரெழுத்து சொல்லாகவே வரும்)
- ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
- வல்லின மெய்கள் மேல் ஊர்ந்து உகரமானது ஆய்த எழுத்தை (ஃ ) தொடர்ந்து வந்தால் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
- எ .கா :எ ஃ கு , கஃசு , அ ஃ து
- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்பது கு ,சு ,டு ,து ,பு ,று ஆகிய எழுத்துக்கள் முன் இரண்டு முதலாகப் பல எழுத்துகளை பெற்று வரும் .
- எ .கா: அரசு , பாலாறு
- வன்தொடர்க் குற்றியலுகரம்
- கு ,சு ,டு ,து ,பு ,று ஆகிய எழுத்துக்கள் முன் வல்லின மெய் எழுத்துக்கள் வந்தால் அவை வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .
- எ .கா: சுக்கு , கச்சு , பட்டு (க் ,ச் ,ட் ,த் ,ப் ,ற் )
- மென்தொடர்க் குற்றியலுகரம்
- கு ,சு ,டு ,து ,பு ,று ஆகிய எழுத்துக்கள் முன் மெல்லின மெய் எழுத்துக்கள் வந்தால் அவை மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .
- எ .கா: சங்கு , மஞ்சு , நண்டு , சந்து
- இடைத்தொடர்க் குற்றியலுகரம்
6. குற்றியலிகரம் :
- கு ,சு ,டு ,து ,பு ,று ஆகிய எழுத்துக்கள் முன் இடையின மெய் எழுத்துக்கள் வந்தால் அவை இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .
- குறுமை + இயல் +இகரம் =குற்றியலிகரம்
- குறுகிய ஓசையுடைய இகரம் குற்றியலிகரம்
- குற்றியலிகரத்தில் வரும் இகரம் , தன் ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும் .
- நாகு +யாது = நாகியது (எ .கா )
7. ஐகாரக்குறுக்கம் :
- வீடு + யாது = வீடியாது
- ஐ காரம் தனக்குரிய மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிப்பது ஐகாரக்குறுக்கம். (ஐ - 2 மாத்திரை )
- ஐம்பது - ஐ காரம் (முதலில் ) -1 1/2 மாத்திரை அளவு ஒலிக்கும்
- தலைவன் - ஐ காரம் (இடையில் ) -1 மாத்திரை அளவு ஒலிக்கும்
8. ஓளகாரக்குறுக்கம் : (ஓள- 2 மாத்திரை)
- கடலை - ஐ காரம் (இறுதியில் ) - 1/2 மாத்திரை அளவு ஒலிக்கும்
- சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் 1 1/2 மாத்திரை அளவு ஒலிக்கும்.
9. மகரக்குறுக்கம்: (ம் - 1/2 மாத்திரை )
- எ .கா : ஓளவை , வௌ வால்
- ம் - என்னும் மெய் எழுத்து தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும்.
- எ .கா : போலும்(போல்ம்) , மருளும்(மருள்ம்) -1/4 மாத்திரை
- வரும் + வண்டி = வரும்வண்டி -1/4
- ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக்குறுக்கம் (ஃ - என்னும் எழுத்து குறைந்து ஒலிக்கும் )
- வருமொழி த் - தகரம் , நிலைமொழி ஈற்று லகர , ளகர மாக இருந்தால் ஆய்தமாகத் திரியும்
- எ .கா : கல் + தீது = கஃ றீது
- முள்+தீது = முஃடீது