பெயர்ச்சொல்
பெயரையும் இடத்தையும் குறித்து வந்தால் பெயர்ச்சொற்கள் ஆயின
எ .கா : மதுரை , அம்மா ,அப்பா
பெயர்ச்சொற்கள் ஆறு வகைப்படும் :
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர் (அ ) குணப்பெயர்
- தொழிற்பெயர்
1. பொருட்பெயர் :
- உயிருள்ள பொருள் - தென்னை
2. இடப்பெயர் :
- உயிரற்ற பொருள் - நாற்காலி
- ஒரு இடத்தை குறிப்பது - எ .கா : வீடு , பள்ளி , தெரு
3.காலப்பெயர் :
- கண் இமைக்கும் நொடிப் பொழுது முதல் ஊழிக்காலம் வரை எல்லா காலத்தை குறிக்கும் பெயர்கள் .
- எ .கா : நொடி ,விநாடி , மணி , பொழுது , கிழமை , வாரம் , ஆண்டு
4. சினைப்பெயர் :.
- சினை என்பது ஒன்றன் உறுப்பைக் குறிப்பது , மனித உறுப்புகள் , விலங்கு உறுப்புகள் , தாவரப்பகுதிகள் , பொருட்களின் பகுதிகள் என முழுமையான ஒன்றின் பகுதிகளை குறிக்கும் பெயர்கள் சினைப்பெயர்கள் .
5.குணப்பெயர்கள் (அ ) பண்புப்பெயர் :
- நிறம் , சுவை , அளவு , வடிவம் அடிப்படையில் தோன்றும்.
- பண்புப்பெயர் விகுதிகள் :
- மை , ஐ , சி , உ , கு ,றி , று , அம், நர் , பம் , து , மன் , இல் .
எ .கா :
நன்மை = நல் + மை
தொல்லை = தொல் + ஐ
மாட்சி = மாண் + சி
மாண்பு = மாண் + பு
நன்கு = நல் + கு
நன்றி = நல் + றி
நலம் = நல் + அம்
தீது = தீமை + து
6.தொழிற்பெயர் :
- தொழிலை குறிப்பது - எ .கா : மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான் .
- ஆடு + அல் = ஆடல் - அல் = தொழிற்பெயர் விகுதி.
தொழிற்பெயர் விகுதிகள் :
- தல் , அல் , அம் , ஐ , வை , கை , கு , பு , உ , தி , சி , வி , உள் , காடு , பாடு , அரவு , ஆணை , மை , து .
எ .கா :
- பெறுதல் = பெறு+தல்
- ஆட்டம் = ஆடு + தல்
- பறவை = பற + வை
- தோற்றரவு = தோற்று + அரவு
- பாய்த்து = பாய் + து
- கோடல் = கோடு + அல்
- வாழ்க்கை = வாழ் + கை
- வரவு = வர + உ
தொழிற்பெயர் வகைகள் :
- முதனிலை தொழிற்பெயர் .
தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழில் புரிவதற்கு முதனிலை தொழிற்பெயர் எனப்படும்
எ .கா : கபிலனுக்கு அடி விழுந்தது
- முதனிலை திரிந்தத் தொழிற்பெயர்:
தொழிற்பெயரின் முதனிலையாகிய பகுதி திரிந்து வருவது முதனிலை திரிந்தத் தொழிற்பெயர்
எ .கா : அறிவறிந்த மக்கட் பேறு
அவனுக்கு என்ன கேடு
வினையாலணையும் பெயர்கள் :
- வினை முற்று வினையை குறிக்காமல் வினைச் செய்தவனை குறிப்பது வினையாலணையும் பெயர் எனப்படும்
- எ .கா : முருகன் பரிசு பெற்றான்
பரிசு பெற்றானைப் பாராட்டினர் .
பெயரெச்சம் :
- முற்று பெறாத எச்சவினைகள் பெயரை கொண்டு முடிந்தால் அவை பெயரெச்சம் எனப்படும் .
- பெயரெச்சம் காலத்தால் மூன்று வகைப்படும்
- இறந்தகாலப் பெயரெச்சம்
- நிகழ்காலப் பெயரெச்சம்
- எதிர்காலப் பெயரெச்சம்
எ .கா :
படித்த கயல்விழி
பெயரெச்சம் இரு வகைப்படும் :சென்ற கோதை
- தெரிநிலைப் பெயரெச்சம் :
- முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாக காட்டும் .
எ .கா : உண்ட இளங்கோவன்
செய்பவன் - இளங்கோவன்
கருவி - கலம்
நிலம் - வீடு
காலம் - இறந்தகாலம்
செய்பொருள் - சோறு
- குறிப்பு பெயரெச்சம் :
- காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லை கொண்டு முடியும் .
- எ .கா : நல்ல பையன்
தன்மைப் பெயர்கள் :(வேற்றுமை உருபு ஏற்கும் பொது திரியும் - ஐ ,ஆல் , கு , இன் ,அது ,கண் )
- நான் , யான் - தன்மை ஒருமைப் பெயர்கள்
- நாம் , யாம் - தன்மை ஒருமைப் பெயர்கள்
- "யான் " என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது "என் " எனத்திரியும்
யான் + | ||
ஐ -> | என்னை | |
ஆல் -> | என்னால் | |
கு -> | எனக்கு | |
இன் -> | என்னின் | |
அது -> | எனது | |
கண் -> | என்கண் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக