சொல்
ஓர் எழுத்தானது தனித்தேனும் , ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து ஒரு பொருளை உணர்த்துமானால் சொல் எனப்படும் .
சொல்லின் வேறுபெயர்கள் : பதம், மொழி , கிளவி
சொல் பாகுபாடு :
இலக்கண வகை :
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
இலக்கியவகை :
- இயற்சொல்
- திரிசொல்
- திசைச்சொல்
- வடசொல்
இயற்சொல் என்பது இயல்பாகப் பொருள் உணரும் சொல்லாகும்
- மண் , பொன் - பெயர் இயற்சொல்
- நடந்தான் , வந்தான் - வினை இயற்சொல்
- அவனை , அவனால் - இடைஇயற்சொல்
- அழகு , அன்பு - உரி இயற்சொல்
திரிசொல் என்பது கற்றோர்க்கு மட்டும் பொருள் விளங்கக் கூடியது என்பதும் இயற்சொல்லில் வேறுபட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.
- கிள்ளை , சுகம் , தத்தை - கிளி - பெயர்த்திரிசொல்
- யானை , கோழி , சங்கு - வாரணம்
- கழறினான் , செப்பினான் , பகர்ந்தான்
- நீக்கினான் , கொண்டான் - வரைந்தான் - வினைதிரிசொல்
- சேரும் , வருதும் , கொல் - இடைதிரிசொல்
- சால , உறு , தவ ,நனி , கூர் , கழி - மிகுதி - உரிதிரிசொல்
- காப்பு , கூர்மை , அச்சம் ,கரிப்பு , விளக்கம், சிறப்பு ,மணம் - உரிதிரிசொல்
.3. திசைச்சொல்
கொடுந்தமிழ் நாடுகள் 12 பெயர்கள் :
- தென்பாண்டி நாடு
- குட்டநாடு
- குடநாடு
- கற்காநாடு
- வேள்நாடு
- பூழி நாடு
- பன்றி நாடு
- அருவா நாடு
- அருவா வட தலை
- சீத நாடு
- மலைய மான் நாடு
- புனல் நாடு (அ ) சோழ நாடு
4. வடசொல் :
ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொது எழுத்தும் , தமிழை ஒத்து வடதிசையிலிருந்து செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன வட சொல் எனப்படும் .
ஓரெழுத்துக்களால் ஆகிய சொற்கள் 42:
- ஆ ,ஈ ,ஊ ,ஏ ,ஐ ,ஓ - உயிர் வருக்கத்தில் ஆறு
- மா ,மீ ,மூ,மை ,மோ - மகர வருக்கத்தில் ஐந்து
- தா , தீ ,தூ ,தே , தை - தகர வருக்கத்தில் ஐந்து
- பா ,பூ , பே ,பை ,போ - பகர வருக்கத்தில் ஐந்து
- நா ,நீ , நே , நை ,நோ - நகர வருக்கத்தில்ஐந்து
- கா , கூ ,கை , கோ - ககர வருக்கத்தில் நான்கு
- வா , வீ ,,வை ,வெள - வகர வருக்கத்தில் நான்கு
- சா ,சீ ,சே ,சோ - சகர வருக்கத்தில் நான்கு
- யா - யகர வருக்கத்தில் ஒன்று
- நொ , து - தனி குறில் பதம் இரண்டு
பதம் :
- பகுபதம் ( இரண்டு (2) எழுத்து முதல் ஏழு எழுத்துக்கள்(7) வரை வரும் )
- பகாப்பதம் (இடைச்சொல்லும் , உரிச்சொல்லும் பகா பதங்களாகவே இருக்கும் )(இரண்டு (2) எழுத்து முதல் ஒன்பது எழுத்துக்கள்(9) வரை வரும் )
பகாப்பதம் :
- பிரித்தல் பொருள் தராத சொல் பகாப்பதம் .
பகாப்பதம் நான்கு வகைப்படும் :
- பெயர்ப் பகாப்பதம் - மரம் , நாய் , நீர்
- வினைப் பகாப்பதம் - உண் , காண் , எடு
- இடைப்பகாப்பதம் - தில் , மன் , பிற
- உரிப் பகாப்பதம் - சால , உறு , நனி , கடி
பகுபதம் :
- பகுதி , விகுதி , இடைநிலை , எனப் பிரிக்கப் படும் பதம் பகுபதம் .
பகுபதம் இரண்டு வகைப்படும் :
- பெயர்ப்பகுபதம்
- வினைப் பகுபதம்
பெயர்ப்பகுபதம் :
- பொருள் , இடம் , காலம் , சினை , குணம் , தொழில் ஆகியவற்றை அடியாக கொன்டு தோன்றுவது .
எ .கா :
- பொன்னன் = பொன் + ன் + அன்( பொன் -பொருட்பெயர் அடியாக உள்ளது )
- ஊரான் = ஊர் + அன் (ஊர் - இடப்பெயர் அடியாக உள்ளது )
- ஆதிரையான் = ஆதிரை + ய் + ஆன் (ஆதிரை- காலப்பெயர் )
- கண்ணன் = கண் +ண் +அன் (கண் - சினை பெயர் )
- கரியன் = கருமை + அன் (கருமை - பண்புப்பெயர் )
- நடிகன் = நடி + க் + அன் ( நடி - தொழிற் பெயர் )
வினைப் பகுபதம் :
- எ .கா : செய்தான் = செய் + த் + ஆன்
பகுபத உறுப்புகள் :
- பகுதி , விகுதி , இடைநிலை , சாரியை , சந்தி , விகாரம் என்னும் ஆறு உறுப்புகள் பகுபத உறுப்புகள் ஆகும் .
1. பகுதி :
- பகுபதத்தில் முதலில் நின்று பொருள் தருவது . (ஏவல் வினையாக வரும்,)
எ .கா :
படித்தான் = படி என்பது பகுதி
ஓடினான் = ஓடு என்பது பகுதி
வந்தான் = வா என்பது பகுதி
2. விகுதி :
- பகுபதத்தில் இறுதியில் நிற்பது விகுதி எனப்படும் .
எ .கா :
நடந்தான் = ஆன் - ஆண் பால் விகுதி
நடந்தாள் = ஆள் - பெண் பால் விகுதி
நடந்தனர் = அர் - பலர்பால் விகுதி
நடந்தது = து - ஒன்றன் பால் விகுதி
3. இடைநிலை :நடந்தன = அ - பலவின்பால் விகுதி
- பகுதிக்கும் , விகுதிக்கும் இடையில் வருவது இடைநிலை எனப்படும் . இடைநிலை காலம் காட்டுவதால் காலங்காட்டும் இடைநிலை எனப்படும் .
1. நிகழ்கால இடைநிலைகள் : கிறு , கிண்று , ஆநின்று
எ .கா :
உண்கிறான் - கிறு
உண்கின்றான் - கின்று
உண்ணாநின்றான் - ஆநின்று
2. இறந்தகால இடைநிலை : த் .ட் .ற் ,இன்
எ .கா :
பார்த்தான் - த்
உண்டான் - ட்
வென்றான் - ற்
பாடினான் - இன்
3. எதிர்கால இடைநிலை : ப் , வ்
எ .கா :
உண்பான் - ப்
வருவான் - வ்
4. எதிர்மறை இடைநிலை : இல் , அல் , ஆ
எ .கா :
உண்டிலன் = உண் + ட் + இல் + அன்
காணலன் = காண் + அல் +அன்
4. சந்தி :பாரான் = பார் + ஆ + ஆன்
- பகுதிக்கும் , இடைநிலைக்கும் இடையில் வரும் , விகுதிக்கும் இடையிலும் வரும் .
எ .கா :
பார்க்கின்றான் = பார் + க் +கிறு +ஆன்5. சாரியை :
- பெயர்ச்சொல்லையும் , வினை சொல்லையும் சார்ந்து வருவது சாரியை எனப்படும் . இடைநிலைக்கும் , விகுதிக்கும் இடையில் வரும் .
எ .கா :
உண்டனன் = உண் + ட் +அன் +அன்
[அன் , ஆன் , இன் , அல் , அற்று , இற்று , அந்து , அம் ]6.விகாரம் :
- பகுதி,விகுதி ,இடைநிலை போன்றவை சேரும் போது இடையில் ஏற்படும் மாறுபாடு விகாரம் எனப்படும் .
எ .கா :
"வந்தான் " என்னும் சொல்லில் உள்ள "வா " என்னும் பகுதி "வ " எனக் குறைந்து குறுகள் விகாரம் ஆயிற்று .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக