சொற்றோடர் வகைகள்
1. செய்தித் தொடர் :
ஒரு கருத்தினைச் செய்தியாக தெரிவிப்பது .
எ .கா : திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
2. வினாத் தொடர் :
வினாப் பொருளைத் தரும் தொடர் .
எ .கா : என்ன ? ஏன் ? எப்படி ?
3. உணர்ச்சித் தொடர் :
பேசும் செய்திகள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொடர்களாக அமைந்தால் உணர்ச்சித் தொடர் ஆகும் .
எ .கா : என்னே ! இமயமலையின் உயரம் !
4. தனிநிலைத் தொடர் :
ஓர் எழுவாய் (அ ) பல எழுவாய் ஒரு பயனிலையை கொண்டு முடிவது தனிநிலை தொடர் .
எ .கா :
அழகன் பாடம் எழுதுகிறான் .
மா , பலா , வாழை என்பன முக்கனிகள்
5. தொடர்நிலை தொடர் :
ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர்நிலை தொடர் .
எ .கா : கார்மேகம் கடுமையாக உழைத்தார் ; அதனால் வாழ்வில் உயர்ந்தார்
6. கலவைத் தொடர் :
ஒரு தனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது கலவை தொடர்.
எ .கா :நேற்று புயல் வீசியதால் , பள்ளிக்கு விடுமுறை.
7. கட்டளைத் தொடர் :
ஒரு செயல் அல்லது சில செயல்களைப் பின்பற்றும் படி ஆணையிட்டுக் கூறுவது கட்டளைத் தொடர் ஆகும் .
எ .கா : பார்த்தப்போ , கவனமாகப் படி
8. செய்வினைத் தொடர் :
எழுவாய் செய்யும் வினை அமைந்த தொடர் செய்வினைத் தொடர் எனப்படும் .
எ .கா : மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினர்
9. செயப்பாட்டு வினைத்தொடர் :
இத்தொடரில் செயப்படுபொருள் , எழுவாய், பயனிலை என்னும் வரிசையில் சொற்கள் அமைந்துள்ளன . எழுவாயோடு "ஆல் " என்னும் மூன்றாம் வேற்றுமை சேர்க்கப்பட்டுள்ளது .
இவ்வகைத் தொடரில் "படு, பட்டது , பெறு , பெற்றது " என்னும் துணை வினைகளில் ஒன்று பயனிலையோடு சேர்ந்து வரும் .
எ .கா :
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குடியரசு தலைவரால் தொடங்கி வைக்கப் பெற்றது .
10. தன் வினைத் தொடர் :
ஒரு எழுவாய் , ஒரு செயலைத் தானே செய்வதால் , தன் வினைத் தொடராகும்
எ .கா :
புரட்சிக் கொடி திருக்குறள் கற்றாள்
11. பிற வினைத் தொடர் :
ஒரு எழுவாய் , ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்விப்பதால் , பிற வினைத் தொடராகும் .
எ .கா : புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தால்
12. நேர்க்கூற்று :
ஒருவர் பேசுவதை , அவர் பேசிய படியே கூறுவது இத்தொடரின் இயல்பு . இதில் மேற்கோள் குறிகள் இடம்பெறும் ; தன்மை , முன்னிலை பெயர்கள் இடம்பெறும் ; இங்கு , இப்போது , இவை எனச் சுட்டுப்பெயர்கள் வரும் .
தேன்மொழி பொன்னியிடம் "நான் நாளை மதுரைக்குச் செல்வேன் " என்றாள்
13, அயற்கூற்றுத் தொடர் :
ஒருவர் அல்லது பலரின் உரையாடல் அயலார் கூறுவது போல் அமைப்பது ஆயர்கூற்று .
எ .கா :
பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்கு செல்வதாகக் கூறினாள் .14. உடன் பாட்டுத் தொடர் :
செயல் அல்லது தொழில் நிகழ்வதை மறுப்பின்றி ஏற்பது உடன் பாட்டுத் தொடர்
எ .கா :
கலா கட்டுரை எழுதினால்15. எதிர்மறைத் தொடர் :
செயல் அல்லது தொழில் நிகழ்வதை மறுத்துக் கூறுவதால் எதிர்மறைத் தொடர்
எ .கா :
கலா கட்டுரை எழுதிலள்16. பொருள் மாறா எதிர்மறைத் தொடர் :
எ .கா : கலா கட்டுரை எழுதாமல் இரால்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக