TNPSC Tamil Question

புதன், 25 ஏப்ரல், 2018

Agupeyar

ஆகுபெயர் 

ஒன்றன்  இயற்பெயர்  தன்னைக்  குறிக்காமல்  தன்னோடு  தொடர்புடைய  வேறொரு  பொருளுக்கு  ஆகி  வருவது.

1. முதலாகுபெயர்  (அ ) பொருளாகுபெயர் :
எ .கா: மல்லிகை  சூடினாள்
மல்லிகை  என்பது  கொடியாகிய  முதற்பொருளை  குறிக்காமல்  பூ  என்னும்  சினையைக்  குறிக்கிறது .
2. இடவாகுபெயர் :
 எ .கா: பூண்டிப்  பள்ளியா  வந்து  பேசியது ?
 'பள்ளி' என்னும்  இடப்பெயர்  அப்பள்ளியில்  பயிலும்  மாணவிக்கு  ஆகி  வந்தது .
3. காலவாகுபெயர் :
எ .கா: திசம்பர் பூ 
 திசம்பர் என்னும்  மாதப்  பெயர்  அம்மாதத்தில்  பூக்கும்  பூவிற்கு  ஆகி  வந்தது .
4. சினையாகு  பெயர் :
எ .கா ;  வெற்றிலை  நட்டான்
'வெற்றிலை '  என்பது  சினையாகிய  இலையை  குறிக்காமல்  அதன்  முதல்  பொருளாகிய  கொடிக்கு  ஆகி  வந்தது
 5. பண்பாகுபெயர் :
எ .கா : வெள்ளை  அடிப்போம்
'வெள்ளை '  என்பது  நிறப்பண்பு  அது  நிறத்தை  குறிக்காமல்  சுண்ணாம்பைக்  குறித்து  வந்தது .
6. தொழிலாகுபெயர் :
எ .கா : பொங்கல்  உண்போம்
"பொங்கல் "  என்பது  பொங்குதலாகிய  தொழிற்பெயர் . தொழிலை  குறிக்காமல்  , அத்தொழிலால்  ஆகும்  உணவை  குறிக்கும்
 7. எண்ணல்  அளவை  ஆகுபெயர் :
எ .கா :  ஒன்று  பெற்றால்  ஒளிமயம்
"ஒன்று "  என்னும்  எண்ணுப்பெயர்  , அவ்வெண்ணுக்குத்  தொடர்புடைய  குழந்தைக்குப்  பெயராகி  வந்தது.
8. எடுத்தல்  அளவை ஆகுபெயர் :
எ .கா : ஐந்து  கிலோ  என்ன  விலை ?
 'ஐந்து ' அளவை  குறிக்காமல்  அவ்வளவுடைய  பொருளுக்கு  (அரிசி , பருப்பு ) ஆகி  வருவது .
9. முகத்தல்  அளவை  ஆகுபெயர் :
எ .கா : நான்கு  லிட்டர்  தேவை
'லிட்டர் '  என்னும்  முகத்தல்  அளவைப்  பெயர் , அவ்வளவை  குறிக்காமல்  , அவ்வளவுடைய  நெய் , எண்ணெய் , முதலியவற்றுள்  ஒன்றை  குறிக்கும் .
10. நீட்டல்  அளவை  ஆகுபெயர் :

எ .கா : மூன்று  மீட்டர்  கொடு
'மீட்டர் '   அளவு  கோலைக்  குறிக்காது  அதனால்  அளக்க  பெறும்  துணிக்கு  ஆகிவந்தது
11. சொல்லாகு  பெயர் :
எ .கா : வள்ளுவர்  சொல்  வாழ்க்கைக்கு  இனிது
 "வள்ளுவர்சொல் " என்பது  சொல்லைக்  குறிக்காது  பொருளுக்கு  பெயராகி  வந்ததால்  இது  சொல்லாகுபெயர்
 12. தனியாகுபெயர் :
எ .கா : பாலை  இறக்கு
'பாலின் '  பெயர்  பாலைக்  குறிக்காமல்  பாத்திரத்தை  குறிக்கிறது. ஓர்  இடத்தில்  உள்ள  ஒரு  பொருளின் பெயர் (தானி ) அது  சார்ந்திருக்கும்  இடத்திற்கு  (தானத்திற்கு ) பெயராகி  வருவது .
 13. கருவியாகு பெயர் :
எ .கா : யாழ்  கேட்டு  மகிழ்ந்தாள்
'யாழ் '  என்னும்  கருவி  இசைக்கு  ஆகி  வருவது.
 14. காரியவாகுபெயர் :
எ .கா : நான்  சமையல்  கற்றேன்
 'சமையல் ' என்னும்  காரியத்தின்  பெயர்  அதன்  காரணத்திற்கு  பெயராகி  வருவது .
 15. கருத்தாவாகு  பெயர் :
எ .கா : திருவள்ளுவரைப்  படித்துப்பார்
 'திருவள்ளுவர் ' என்பது  அவரால்  இயற்றப்  பெற்ற  நூலுக்கு  ஆகிவந்ததால்  கருத்தாவாகு  பெயர் .
16. உவமையாகு  பெயர் :
 எ .கா : நாரதர்  வருகிறார்
 'நாரதர் '  என்னும்  பெயர்  அவரை  குறிக்காமல்  அவரைப்  போன்ற  வேறொருவருக்கு  ஆகி வருவது .
 17. இருமடியாகு  பெயர் :
எ .கா : புளி  காய்த்தது
 'புளி ' பழத்திற்கு ஆகி , பின்பு  அப்பழத்தை  உடைய மரத்திற்கும்  ஆகி  வந்துள்ளது . ஒரு  சொல்  இரண்டு  நிலையில்  ஒன்றோடுஒன்று  தொடர்புடைய  பொருளுக்கு  ஆகி  வருவது 
18. அடையெடுத்தவாகு  பெயர் :
எ .கா : வெற்றிலை  நட்டான்
வெற்றிலை  = வெறுமை  + இலை  - வெறுமை  இலை  என  அழைக்கப்பட்டு  வெற்றிலையாகியது  . வெறுமை  என்பது  இலைக்கு  அடையாகும் . இலை  என்பது  அடைக்குரிய  பொருளாகும் .
இலைக்குரிய  அடையான வெறுமையைச்  சேர்த்து  'வெற்றிலை நட்டான் '  என்னும்  பொது  அடையும்  (வெறுமை ) , சினையும் (இலை )   அதன்  முழுப்பொருளுக்கு  ஆகி  வருவது .
19. இருபெயரொட்டு  ஆகுபெயர் :
இரண்டு  பெயர்ச்  சொற்கள்  சேர்ந்து  ஒரு  பொருளை  குறிப்பதுண்டு. இரண்டு  சொற்களுள்  ஒன்று  சிறப்பு  பெயராகவும்  , மற்றொன்று  பொதுப்  பெயராகவும்  அமைந்து  ஒரே  பொருளைக்  குறிப்பது .
 எ .கா : வாழை  மரம் 
 வகரக்  கிளவி ( வகரம் - சொல் , கிளவி - சொல் )
வாழை  -  மரவகையில்  ஒன்றின்  சிறப்பு  பெயராகும் . மரம்  - பொது  பெயர் , இரண்டும் சொற்களும்  சேர்ந்து ஒரு  பொருளை  குறிக்கும்.

20. விட்டவாகு  பெயர் :
எ .கா : சென்னை  வளர்கிறது
சென்னை - இடத்தை  குறிக்காமல்  , தன்னிடத்தில்  வாழும்  மக்களை  குறிக்கும் .

21. விடாத  ஆகுபெயர் :
எ .கா : இனிப்புத்  தின்றான்
இனிப்பு - என்னும்  சுவையை  குறித்த  சொல்  , தனக்குரிய  இனிமைப்  பொருளை விட்டு  விடாமல்  அச்சுவையை  உடைய  தின்பண்டத்தைக்  குறிக்கும்
Share:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Amazon.in

Blogroll

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

Text Widget

model question 2012

TNPSC 2012  தமிழ் இலக்கணம்  1. 'ஆற்றீர் ' - வேர்ச் சொல்லை தேர்வு செய்  ஆற்றி  ஆற்றிய  ஆற்று  ஆற்றுதல்  2. பின...

இந்த வலைப்பதிவில் தேடு

Blogroll

Pages - Menu

Blogger Pages

Blogger templates

captain_jack_sparrow___vectorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Popular Posts

Recent Posts

Unordered List

Definition List

Ads Here

Pages

Theme Support