அடி
சீர்கள் பல அடுத்து நடப்பது அடி எனப்படும்
அடி 5 வகைப்படும் :
- குறளடி
- சிந்தடி
- அளவடி
- நெடிலடி
- கழிநெடிலடி
1. குறளடி :
- அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது குறளடி எனப்படும்
- எ .கா :
2.சிந்தடி :
- அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது சிந்தடி எனப்படும்
- எ .கா: பழுதி லாத பயிர்த்தொழில்
பழுதி லாது பயிற்றவே
3.அளவடி :
- அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது அளவடி (அ ) நேரடி எனப்படும்
- எ .கா: தாய்மொழி தாயினும் தகவிற் போற்றுவன்
ஆய்மொழி யாளர்தம் அன்புக்கு ஏற்றவன்
4. நெடிலடி :
- அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது நெடிலடி எனப்படும்
- எ .கா : ஆடும் கடைமணி நாஅசை யாமல் அகிலமெங்கும்
நீடும் குடையைத் தரித்த பிராணிந் நீள்நிலத்தில்
5. கழிநெடிலடி :
- அடிதோறும் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைப் பெற்று வருவது கழிநெடிலடி(அ ) அறுசீர்க்கழிநெடிலடி எனப்படும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக