வினா , விடை , ஒருபொருட்பன்மொழி
வினா :
வினா ஆறு வகைப்படும்
1. அறிவினா :
தான் ஒரு பொருளை நன்கறிந்தும் அப்பொருள் பிறர்க்கு தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவப்படும்
எ .கா : திருக்குறளை இயற்றியவர் யார் ? என ஆசிரியர் மாணவனிடம் வினவுதல் .2. அறியா வீணா :
தான் அறியாத ஒரு பொருளை அறிந்துகொள்வதற்காக பிறரிடம் வினவுவது .
எ .கா : எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை ? [ என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது ]3. ஐய வினா :
தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒருபொருள் குறித்து , ஐயத்தை போக்கி கொள்வது ஐய வினா
எ .கா :அங்கே கிடப்பது பம்போ ? கயிறோ ?4. கொளல் வினா :
தான் ஒரு பொருளை வாங்கி கொள்ளும் பொருட்டு கடை காரரிடம் வினவும் வினா .
எ .கா : பருப்பு உள்ளதா ?5. கொடை வினா :
தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப் பற்றிப் பிறரிடம் வினவுவது
எ .கா : மாணவர்களே ! உங்களுக்கு \சீருடை இல்லையோ?6. ஏவல் வினா:
ஒரு தொழிலைச் செய்யும் படி ஏவும் வினா
எ .கா : மனப்பாடச் செய்யுளை படித்துவா ?
விடை வகைகள்
1. சுட்டு விடை : " சென்னைக்கு வழி யாது ? " விடை : இது
2. மறை விடை : "இது செய்வாயா ? " விடை : " செய்யேன் " - மறுத்து கூறுவது
4. ஏவல் விடை : " இது செய்வாயா ?" விடை : "நீயே செய் "
5. வினாஎதிர் வினாதல் விடை : "இது செய்யயா?" விடை : செய்யாமலிருப்பேனோ ?
6. உற்றுதுரைத்தல் விடை : " இது செய்வாயா ? " விடை : உடம்பு நொந்தது (உற்றதை விடையாகக் கூறுவது )
7. உறுவது கூறல் விடை: "செய்யவாயா ?" விடை : கை வலிக்கும் .
8. இனமொழி விடை : "ஆடுவாயா ? " விடை : பாடுவேன்
ஒரு பொருட் பன்மொழி
ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது ஒரு பொருட் பன்மொழி ஆகும் .
எ .கா : திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது
Please give pdf file sir
பதிலளிநீக்கு