வினைச்சொல்
ஒரு எழுவாய் செய்யும் செயலை (இயக்கத்தை ) (அ ) தொழிலை குறிப்பதால் இச்சொல் வினைச்சொல் (அ ) காலத்தை குறிப்பது .
எ .கா : இராமன் வந்தான்
வினை முற்று :
- தன் பொருளில் முற்றுப் பெற்று வந்துள்ள வினைச் சொற்கள் வினைமுற்றுகள் என்பர் .
- ஆன் - என்னும் விகுதி கொண்டு முடியும் .
- முக்காலத்தில் ஒன்றை உணர்த்தும் , திணை , பால் , எண் , இடம்
வினை முற்று இரு வகைப்படும் :
தெரிநிலை வினைமுற்று : - (காலத்தை வெளிப்படையாக காட்டும்)
எ .கா : உழுதான்
செய்பவன் = உழவன்
கருவி - கலப்பபை
நிலம் - வயல்
செயல் - உழுதல்
காலம் = உழுதான்
செய்பொருள் - நெல்
குறிப்பு வினைமுற்று : (ஆறு கருத்துகளில் ஒன்றை மட்டும் தெரிவித்து காலத்தை குறிப்பாக காட்டும்.
எ .கா : அவன் உழவன்
எச்சம் :
- முற்று பெறாத முழுமையடையாத வினை சொற்கள் எச்சம் எனப்படும் .
வினையெச்சம் :
- ஓர் எச்ச வினை , வினையைக் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எனப்படும் .
- இறந்தகால வினையெச்சம் - படித்து வந்தான்
- நிகழ்கால வினையெச்சம் - படித்து வருகின்றான்
- எதிர்கால வினையெச்சம் - படித்து வருவான்
வினையெச்சம் இரு வகைப்படும் :
தெரிநிலை வினையெச்சம் :
- காலத்தையும் , செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை தெரிநிலை வினையெச்சம்
எ .கா : படித்து தேறினான் .
குறிப்பு வினையெச்சம் :
- பண்பின் அடிப்படையில் பொருளை உணர்த்தி நின்று வினைமுற்றை கொண்டு முடிந்துள்ளன .
எ .கா : மெல்லப் பேசினான்
முற்றெச்சம் :
- ஒரு வினைமுற்று சொல் எச்ச பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றை கொண்டு முடிவதே முற்றெச்சம் எனப்படும் .
- எ .கா : நந்தினி வந்தனள் , போயினள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக