பொருள்கோள்
ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ளும் முறையை பொருள்கோள் .
பொருள்கோள் எட்டு வகைப்படும் :
- ஆற்று நீர்ப் பொருள்கோள்
- மொழிமாற்று பொருள்கோள்
- நிரல்நிறை ப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
- தாப்பிசைப் பொருள்கோள்
- அளைமறி பாப்புப் பொருள்கோள்
- கொண்டு கூட்டுப் பொருள்கோள்
- அடிமறி மாற்றுப்பொருள்கோள்
இடையறாத செல்லும் ஆற்று நீரைப் போல பாடலின் சொற்கள் முன் பின் மாறாது நேரே சென்று பொருள் கொள்வது ஆற்று நீர்ப் பொருள்கோள் ஆகும் .
எ .கா :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்யர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்2. மொழிமாற்று பொருள்கோள்:
ஓரடியுள் உள்ள சொற்களை அவை தரும் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கூறுதல் மொழிமாற்று பொருள்கோள் ஆகும்
எ .கா :
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்
[அருள் யாதெனில் கொல்லாமை ; அருள் அல்லது யாதெனில் உயிர்க் கொலை எனப் பொருள் ]3. நிரல்நிறை ப் பொருள்கோள்:
மாறி மாறி இருக்கின்ற சொற்களை வரிசையாக அமைத்துப் பொருள்கொள்வது நிரல்நிறை ப் பொருள்கோள் ஆகும் .
எ .கா :
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது .
[இக்குறட்பாவில் அன்பிற்கும்ப் பண்பும் ,அறத்துக்குப் பயனும் நிரல் நிறையாக வந்து அமைந்துள்ளதால் நிரல்நிறை ப் பொருள்கோள் ]4. விற்பூட்டுப் பொருள்கோள் :
வில்லின் இருமுனைகளையும் இணைத்து கட்டுதல் போல செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள் படப் பொருத்துவது விற்பூட்டு பொருள்கோள் அல்லது பூட்டுவிற் பொருள்கோள்
எ .கா :
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு5. தாப்பிசைப் பொருள்கோள்:
ஊஞ்சலின் நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவது போல செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல் , செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளை தருவது தாப்பிசைப் பொருள்கோள்.
தாம்பு + இசை = தாப்பிசை
எ .கா :
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை6. அளைமறி பாப்புப் பொருள்கோள்:
பாம்பு புற்றில் தலை வைத்து நுழையும் போது , தலை மேலாகவும் உடல் அடுத்தும் செல்வது போலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக்
கூட்டிப் பொருள் கொள்வது அளைமறி பாப்புப் பொருள்கோள் (அளை - புற்று , பாப்பு - பாம்பு )7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்:
செய்யுளின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோள்8. அடிமறி மாற்றுப்பொருள்கோள்:
செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறி மாற்றுப்பொருள்கோள்.
Koorapatta eduthukattukalai innum semmaipaduthhalam
பதிலளிநீக்கு