தொடை
[ தொடை - தொடுக்கப்படுவது , தொடை - மாலை ]
மலர்களை தொடுப்பது போலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமைய தொடுப்பது தொடை எனப்படும் .
தொடை எட்டு வகைப்படும் :
- மோனைத் தொடை
- எதுகைத் தொடை
- முரண்த் தொடை
- இயைபுத் தொடை
- அளபெடைத் தொடை
- இரட்டைத் தொடை
- அந்தாதித் தொடை
- செந்தொடை
1. மோனைத் தொடை:
- செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவர தொடுப்பது அடிமோனைத் தொடை எனப்படும் .
- எ .கா :
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு
2. எதுகைத் தொடை:
- செய்யுளில் அடிதோறும் முதலெழுத்து அளவொத்து (ஓசையில் ) நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடி எதுகை தொடை எனப்படும் .
- எ .கா :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
3 முரண் தொடை :
- செய்யுளில் அடிதோறும் முரண்பட தொடுப்பது முரண்தொடை
- எ .கா :
இன்பம் விழையான் இடும்பை இயல்யென்பான்
துன்பம் உறுதல் உலகு
4. இயைபுத் தொடை:
- செய்யுளில் அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவர தொடுப்பது அடிஇயைபுத் தொடை எனப்படும் .
- எ .கா :
கொண்ட கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டத் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம்விளை யாடும்
5. அளபெடைத் தொடை :
- செய்யுளில் அடிதோறும் முதல்ச்சீர் அளபெடுப்பது அளபெடைத் தொடை எனப்படும் .
- எ .கா :
கெடுப்பதூஉம் கேட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக