எழுத்துக்களின் பிறப்பு
எழுத்து பிறக்கும் இடமும் உறுப்பும் :
" உயிரினது முயற்சியால் உள்ளிருந்து எழுப்பும் காற்றினால் எழும் அணுக்கூட்டம் மார்பு ,கழுத்து ,தலையுச்சி மூக்கு ஆகிய இடங்கள் அடைந்து. உதடு , நாக்கு , பல் , மேல்வாய் ஆகிய நான்கினுடைய முயற்சியால் வேறு வேறு எழுத்து ஒலியாய் வெளிப்படுதல் எழுத்தின் பிறப்பு எனப்படும் . "
முதல் எழுத்துக்கள் பிறக்கும் இடங்கள் :
- உயிர் எழுத்துக்களும் இடை எழுத்துக்களும் பிறக்கும் இடம்(ஞ ,ங,ண ,ந ,ம ,ன ) - கழுத்து
- மெல்லெழுத்து பிறக்கும் இடம் (ய ,ர ,ள .வ ,ழ ,ல )- மூக்கு
- வல்லெழுத்து பிறக்கும் இடம்(க ,ச ,ட ,த ,ப ,ர ) - மார்பு
உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடங்கள் :
- அ ,ஆ - அண்ணத்தின் தொழிலாகிய அங்காத்தல் முயற்சியில் பிறக்கும்
- இ ,ஈ ,எ ,ஏ, ஐ - அங்காப்புடனே மேல்வாய் பல்லை நாக்கினது நுனி பொருந்த பிறக்கும் .
- உ ,ஊ ,ஒ ,ஓ ,ஒள - இதழ் குவி எழுத்துகள்
- க ,ங - நாக்கின் அடி , மேல் வாய் அடி
- ச , ஞ - நாக்கின் நடு , மேல்வாய் நடு
- ட ,ண - நாக்கின் கடை , மேல்வாய் கடை
- த ,ந - மேல்வாய் பல்லின் அடி , நாக்கு நுனி
- ப ,ம - மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துவதால்
- ய - நாக்கின் அடி , மேல்வாய் அடி பொருந்துவதால்
- ர ,ழ - மேல்வாய் நாக்கின் நுனி தடவ
- ல - மேல்வாய்ப் பல் அடியை ஓரமானது தடித்து நெருங்க
- ள - மேல்வாயை நாவின் ஓரமானது தடித்து தடவ
- வ -மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால்
- ற ,ன - மேல்வாயை நாக்கு நுனி மிகவும் பொருந்தினால்
- ஃ - தலை , அங்காத்தல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக