மூவகை மொழி
"பகாப் பதமாயினும் பகுபதமாயினும் ஒரு சொல் ஒரு பொருளை மட்டும் குறித்து வருவது தனி மொழி எனப்படும் "
(எ -டு ) கிளி, மயில் ,புலி ,பாடினான் - தனிமொழி
"இரு பதங்களும் அல்வழி வேற்றுமை பொருளில் இரண்டு முதலாகத் தொடர்ந்து வந்து இரண்டு முதலிய பல பொருள்களைத் தந்தால் தொடர் மொழி எனப்படும் "
(எ -டு ) பாரி வள்ளல் , குடும்ப வாழ்க்கை , செந்தமிழ் - தொடர்மொழி
"ஒரு சொல் பகாப் பதமாகத் தனிமொழியாக , நின்று ஒரு பொருளையும் , அதே சொல் பகுப்பதமாகி தொடர்மொழி நிலையில் பல பொருளையும் கொடுக்குமாயின் பொதுமொழி "
(எ -டு ) பலகை , தாமரை , எட்டு - பொதுமொழி
வழக்கு
வழக்கு இரண்டு வகைப்படும் :
- இயல்பு வழக்கு
- தகுதி வழக்கு
1. இயல்பு வழக்கு:
- இலக்கணம் உடையது : - இலக்கண நெறி மாறாமல் வழங்கி வரும் சொல் .(எ -டு )நிலம் , நீர்
- இலக்கணப் போலி :- இலக்கண நெறி மாரி வழங்கி வரும் சொல். (எ -டு ) முன்றில் , புறநகர் , கோயில்
- மரூஉ :- இலக்கணத்தில் சிதைந்து வழங்கும் சொல்
(எ -டு ) கோவை , தஞ்சை , அந்த , இந்த , யார் , என் , என்ன , புதுவை
2. தகுதி வழக்கு :
- இடக்கர் அடக்கல் :- என்பது பலர் முன்னிலையில் சொல்லத் தகாத சொல்லை மறைத்து வேறு வாய்பாட்டால் சொல்வது ஆகும். (எ -டு )மலம் கழுவி வருவதை கால் கழுவி வருவதாக கூறுதல்
- மங்கலம் :- என்பது மங்கலம் அல்லாததை நீக்கிக் கூறுதல்
(எ -டு ) இடுகாட்டை நன்காடு என்று கூறுதல்
- குழூஉக் குறி :- என்பது ஒரு கூட்டத்தார் ஏதோ ஒரு காரணம் பற்றித் தம் கூட்டத்தார்க்கு மட்டும் பொருள் விளங்கும் வகையில் குறியீட்டு சொற்களை அமைத்து கூறுதல்.
Vayaingu mozhi in illakkana kurripu
பதிலளிநீக்குVayaingu mozhi in illakkana kuripu
பதிலளிநீக்கு83i3jk2m2n21
பதிலளிநீக்கு