TNPSC Tamil Question

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

model question 2012

TNPSC 2012 

தமிழ் இலக்கணம் 

1. 'ஆற்றீர் ' - வேர்ச் சொல்லை தேர்வு செய் 
  • ஆற்றி 
  • ஆற்றிய 
  • ஆற்று 
  • ஆற்றுதல் 
2. பின் வருவனவற்றுள்  மோனைத் தொடைக்கு தொடர்பில்லாதது எது ?
  • முதலெழுத்து ஒன்றி வருவது 
  • இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது 
  • முதல் எழுத்து இனவெழுத்தாக இருப்பது 
  • அடிகளிலும் சீர்களில் அமையக்   கூடியது 
3. சரியாக பொருந்தியுள்ளது  எது ?
  • செந்தாமரை  - உவமைத்  தொகை 
  • நீர்வேலி  - உருவகம் 
  • குணமிலார்  - பண்புத் தொகை 
  • குறிநிறம்  - உரிச் சொற்றோடர் 
4. பொருத்துக
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது  - அ. வினா வாக்கியம்
 2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் - ஆ . உணர்ச்சி வாக்கியம்
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா ? -  இ . செயப்பாட்டு  வினை
4. என்னே ! சிற்பியின் கை  வண்ணம்! - ஈ . செய்வினை
 குறியீடுகள்:
1           2          3           4
  •            ஈ       அ         இ         ஆ 
  •            இ        ஈ         அ        ஆ 
  •           ஆ       ஈ          அ          இ 
  •          அ         ஆ         இ         ஈ 
5. பொருத்துக

  1. நட்டோர்             -            அ )  அருகில் 
  2. நணி                      -           ஆ ) படுக்கை 
  3. பாயல்                  -            இ ) வலிமை 
  4. மதுகை                -            ஈ )  நண்பர் 
 குறியீடுகள்:

1           2          3           4
  •           ஈ       ஆ         இ         அ
  •           ஈ        அ        ஆ        
  •          ஆ       இ          ஈ          அ
  •          அ         ஈ         ஆ         இ 
6. பொருத்துக
  1. ஆர            -              அ . தணிய 
  2. ஆற           -              ஆ . நிறைய 
  3. ஊர            -               இ . சுரக்க 
  4. ஊற           -                ஈ . நகர 

குறியீடுகள்:

1           2          3           4
  •           அ       ஆ         இ         ஈ
  •           ஆ        இ        ஈ         அ
  •          இ       ஆ          அ          ஈ
  •          ஆ         அ         ஈ         இ 
Share:

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

Movagai Mozhi, vazhaku



மூவகை  மொழி 

  • தனிமொழி 

"பகாப் பதமாயினும்  பகுபதமாயினும் ஒரு சொல்  ஒரு பொருளை  மட்டும்  குறித்து வருவது  தனி  மொழி  எனப்படும் "
(எ -டு ) கிளி, மயில் ,புலி ,பாடினான்  - தனிமொழி
  • தொடர்மொழி 

"இரு பதங்களும் அல்வழி வேற்றுமை  பொருளில் இரண்டு  முதலாகத்  தொடர்ந்து வந்து  இரண்டு  முதலிய பல  பொருள்களைத் தந்தால்  தொடர் மொழி  எனப்படும் "
 (எ -டு ) பாரி வள்ளல் , குடும்ப  வாழ்க்கை , செந்தமிழ்  - தொடர்மொழி 
  • பொதுமொழி 

"ஒரு சொல் பகாப் பதமாகத் தனிமொழியாக , நின்று ஒரு  பொருளையும் , அதே  சொல் பகுப்பதமாகி தொடர்மொழி நிலையில் பல பொருளையும் கொடுக்குமாயின் பொதுமொழி   "
 (எ -டு ) பலகை , தாமரை , எட்டு - பொதுமொழி

Share:

pirappu

எழுத்துக்களின் பிறப்பு 


எழுத்து  பிறக்கும் இடமும்  உறுப்பும் :

 " உயிரினது  முயற்சியால் உள்ளிருந்து  எழுப்பும் காற்றினால்  எழும்  அணுக்கூட்டம் மார்பு ,கழுத்து ,தலையுச்சி மூக்கு  ஆகிய  இடங்கள் அடைந்து. உதடு , நாக்கு , பல் , மேல்வாய்  ஆகிய  நான்கினுடைய  முயற்சியால்  வேறு வேறு  எழுத்து  ஒலியாய்  வெளிப்படுதல்  எழுத்தின்  பிறப்பு  எனப்படும் . "

முதல்  எழுத்துக்கள்  பிறக்கும்  இடங்கள் :
  • உயிர்  எழுத்துக்களும்  இடை  எழுத்துக்களும்  பிறக்கும்  இடம்(ஞ ,ங,ண ,ந ,ம ,ன ) - கழுத்து 
  • மெல்லெழுத்து  பிறக்கும் இடம் (ய ,ர ,ள .வ ,ழ ,ல )- மூக்கு 
  • வல்லெழுத்து  பிறக்கும் இடம்(க ,ச ,ட ,த ,ப ,ர )  - மார்பு
உயிர்  எழுத்துக்கள் பிறக்கும்  இடங்கள் :

  1. அ ,ஆ - அண்ணத்தின்  தொழிலாகிய   அங்காத்தல் முயற்சியில்  பிறக்கும் 
  2. இ ,ஈ ,எ ,ஏ, ஐ - அங்காப்புடனே மேல்வாய்  பல்லை நாக்கினது  நுனி  பொருந்த  பிறக்கும் .
  3. உ ,ஊ ,ஒ ,ஓ ,ஒள - இதழ்  குவி  எழுத்துகள் 
  4. க ,ங - நாக்கின்  அடி , மேல் வாய்  அடி 
  5. ச , ஞ  - நாக்கின்  நடு , மேல்வாய்  நடு 
  6. ட ,ண - நாக்கின்  கடை , மேல்வாய் கடை 
  7. த ,ந - மேல்வாய்  பல்லின் அடி , நாக்கு  நுனி 
  8. ப ,ம  - மேல்  உதடும் கீழ்  உதடும்  பொருந்துவதால் 
  9.  ய  - நாக்கின் அடி , மேல்வாய்  அடி  பொருந்துவதால் 
  10. ர ,ழ  - மேல்வாய்  நாக்கின் நுனி  தடவ 
  11. ல -  மேல்வாய்ப்  பல்  அடியை  ஓரமானது தடித்து நெருங்க
  12. ள - மேல்வாயை நாவின்   ஓரமானது தடித்து தடவ 
  13. வ -மேல்வாய்ப்  பல்லைக்  கீழ் உதடு  பொருந்துவதால்
  14. ற ,ன - மேல்வாயை  நாக்கு நுனி  மிகவும் பொருந்தினால் 
  15. ஃ - தலை , அங்காத்தல்

Share:

புதன், 2 மே, 2018

thoganilai thodar

தொகாநிலை  தொடர் 


ஒரு தொடரில்  இரு  சொற்கள்  அமைந்து  இரண்டிற்கும்  இடையில்  சொல்லோ  உருபோ  மறையாது பொருளை  உணர்த்துவது  தொகாநிலை  தொடர் எனப்படும் .

தொகாநிலை தொடர்கள்   :


1. எழுவாய்த்  தொடர் : 

2.விளித் தொடர்  : எ .கா : கதிரவா ! வா !

3. வினைமுற்றுத் தொடர் :  எ .கா :  " கண்டேன்  சீதையை " வினைமுற்று  முதலில்  வந்து  பெயரைத்  தொடர்கிறது .

4. பெயரெச்சத் தொடர் : எ .கா : "விழுந்த  மரம் "

5. வினையெச்சத்  தொடர் :  எ .கா : "வந்து  போனான்  "

6. வேற்றுமைத்   தொகாநிலைத்   தொடர் : எ .கா : "வீட்டை க் கட்டினான் "

7. இடைச்   சொற்றொடர்  :  எ .கா : "மற்றொன்று "

8. உரிச்  சொற்றொடர்:  எ .கா : "மாமுனிவர் "

9. அடுக்கு தொடர் : எ .கா : "வாழ்க  வாழ்க  வாழ்க "

Share:

திங்கள், 30 ஏப்ரல், 2018

thogainilai thodar

தொகைநிலை தொடர் 


சொற்கள்  தொடராகும்  போது  இரு  சொற்களிடையே  வேற்றுமை , வினை , உவமை  முதலியவற்றுள்  ஏதேனும்  ஒன்று  மறைந்து  வரும் . இவ்வாறு  உருபுகள்  மறைந்து  வரும்  தொடர்கள்  "தொகைநிலை  தொடர்கள் " என்பர் .

தொகைநிலை  தொடரின்  வகைகள் :

  1. வேற்றுமைத்  தொகை 
  2. வினைத்  தொகை 
  3. பண்புத் தொகை 
  4. உவமைத்  தொகை 
  5. உம்மைத்  தொகை 
  6. அன்மொழித் தொகை 

1. வேற்றுமைத்  தொகை :

பெயர்ப்  பொருளை  வேறுபடுத்தி  காட்டும்  உறுப்புக்கு  வேற்றுமை  உருபு  என்பர் .
 1. முதல்  வேற்றுமை : உருபு  இல்லை
2. இரண்டாம்  வேற்றுமை : "ஐ "
எ .கா :   பால்  பருகினான்   = பால் + ஐ +பருகினான் (ஐ- என்னும்  உருபு   மறைந்து  வந்துள்ளது )
3. மூன்றாம்  வேற்றுமை : "ஆல் "
எ .கா :தலை  வணகிங்கினான் = தலை  + ஆல்  + வணங்கினான் .
4. நான்காம்  வேற்றுமை  உருபு :"கு "
 எ .கா : வேலன் மகன் = வேலன்  + கு +மகன் 
5. ஐந்தாம்  வேற்றுமை  உருபு : "இன் "

எ .கா :  ஊர்  நீங்கினான்  = ஊர்  + இன்  + நீங்கினான்
6. ஆறாம்  வேற்றுமை  உருபு : "அது "
எ .கா : செங்குட்டுவன் சட்டை  = செங்குட்டுவன்  + அது + சட்டை  
7. ஏழாம்  வேற்றுமை உருபு : "கண் "
எ .கா :  குகைப்புலி  = குகை + கண்  + புலி
8. எட்டாம்  வேற்றுமை  உருபு : உருபு  இல்லை

2. வினைத்  தொகை :

மூன்று  காலங்களையும்  ஏற்று  வருவது . காலங்காட்டும்  இடைநிலையும் பெயரெச்ச  விகுதியும்  மறைந்து  வரும்  பெயரெச்சம்  வினைத்தொகை  எனப்படும்
எ .கா :  உண்கலம் , ஆடுகொடி , பாய்புலி , அலைகடல்

3. பண்புத் தொகை :

பண்புப்  பெயர்கள் (வெண்மை , சதுரம் , வலிமை , நிலவு , கல் , சுவை ) ஆகிய  பெயர்ச் சொற்களோடு சேர்ந்து  வரும் போது  இரண்டிற்கும்  இடையில்  "ஆகிய , ஆன " என்னும்  பண்பு  உருபுகளும் 'மை ' விகுதியும்  தொக்கி  வருவது .
எ .கா : வெண்ணிலவு , சதுரக்கல் , இன்சுவை

4. உம்மை  தொகை : 

 எ .கா : கபில  பரணர் , உற்றார்  உறவினர் .
கபிலரும்  பரணரும் , உற்றாரும்  உறவினரும் , இடையிலும்  இறுதியிலும்  'உம் ' என்னும்  இடைச்சொல்  மறைந்து  வந்து  பொருள்  தருவது .

5. உவமைத்  தொகை :

எ .கா . கயல்விழி   வந்தால்
"கயல் போன்ற  விழி "  என்னும்  பொருளை த்தரும்  உவமைத்  தொகை

6.அன்மொழித்  தொகை :

 எ .கா : "கயல் போன்ற  விழியை  உடைய  பெண் "
என்னும்  தொடரில்  "உடைய " "போன்ற "  சொற்கள்  தொடரில்  இல்லாதவை , இவ்வாறு  உவமை  தொகை  அடுத்து  அல்லாத  மொழி  தொக்கி  வருவது  அன்  மொழி  தொகைத்  தொகை


Share:

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

Vina, vidai, oruporutpanmozhi

வினா , விடை , ஒருபொருட்பன்மொழி 

வினா :
வினா  ஆறு  வகைப்படும்

1. அறிவினா :
தான்  ஒரு  பொருளை  நன்கறிந்தும்  அப்பொருள்  பிறர்க்கு  தெரியுமா  என்பதை  அறியும்  பொருட்டு  வினவப்படும்
எ .கா :  திருக்குறளை  இயற்றியவர் யார் ? என  ஆசிரியர்  மாணவனிடம்  வினவுதல் .
2. அறியா வீணா :
 தான்  அறியாத  ஒரு பொருளை அறிந்துகொள்வதற்காக  பிறரிடம்  வினவுவது .
எ .கா : எட்டுத்தொகை  நூல்களுள் புறம் பற்றியன  எவை ? [ என மாணவன்  ஆசிரியரிடம்  வினவுவது ]
3. ஐய வினா :
தனக்கு  ஐயமாக  இருக்கின்ற  ஒருபொருள்  குறித்து , ஐயத்தை  போக்கி  கொள்வது ஐய வினா
எ .கா :அங்கே  கிடப்பது  பம்போ ? கயிறோ ?
4. கொளல் வினா :
 தான்  ஒரு பொருளை  வாங்கி  கொள்ளும்  பொருட்டு  கடை  காரரிடம் வினவும்  வினா .
எ .கா : பருப்பு  உள்ளதா ?
 5. கொடை  வினா :
தான்  ஒரு  பொருளைக்  கொடுப்பதற்காக,  அப்பொருள்  இருத்தலைப்  பற்றிப்  பிறரிடம்  வினவுவது
எ .கா : மாணவர்களே ! உங்களுக்கு  \சீருடை  இல்லையோ?
6. ஏவல் வினா:
ஒரு  தொழிலைச்  செய்யும்  படி ஏவும்  வினா
எ .கா :  மனப்பாடச்  செய்யுளை  படித்துவா ?


விடை  வகைகள் 

1. சுட்டு  விடை :  " சென்னைக்கு  வழி  யாது ? "  விடை : இது 

2. மறை  விடை :  "இது  செய்வாயா ? " விடை : " செய்யேன் " - மறுத்து கூறுவது

 3. நேர்  விடை :  "இது  செய்யவாயா  ?"  விடை: " செய்வேன் "  - உடன்பட்டுக்  கூறுதல்

4. ஏவல்  விடை :  " இது  செய்வாயா ?"  விடை : "நீயே  செய் "

5. வினாஎதிர்  வினாதல்  விடை : "இது  செய்யயா?" விடை : செய்யாமலிருப்பேனோ ?

6. உற்றுதுரைத்தல்  விடை : " இது  செய்வாயா ? " விடை : உடம்பு  நொந்தது (உற்றதை  விடையாகக்  கூறுவது )

7. உறுவது  கூறல் விடை: "செய்யவாயா ?" விடை : கை  வலிக்கும் .

8. இனமொழி  விடை : "ஆடுவாயா ? " விடை : பாடுவேன்


Share:

புதன், 25 ஏப்ரல், 2018

Sotrrodar vagaikal

சொற்றோடர்  வகைகள் 

1. செய்தித்  தொடர் :
ஒரு  கருத்தினைச்  செய்தியாக  தெரிவிப்பது .
எ .கா : திருவள்ளுவர்  திருக்குறளை  இயற்றினார்
2. வினாத் தொடர் :
வினாப்  பொருளைத்  தரும்  தொடர் .
எ .கா : என்ன ? ஏன் ? எப்படி ?
3. உணர்ச்சித்  தொடர் :
பேசும்  செய்திகள்  உணர்ச்சியை  வெளிப்படுத்தும்  தொடர்களாக   அமைந்தால்  உணர்ச்சித்  தொடர்  ஆகும் .
எ .கா : என்னே ! இமயமலையின்  உயரம் !
4. தனிநிலைத்  தொடர் :
ஓர்  எழுவாய்  (அ ) பல  எழுவாய்  ஒரு  பயனிலையை  கொண்டு  முடிவது தனிநிலை  தொடர் .
எ .கா :
அழகன்  பாடம்  எழுதுகிறான் .
மா  , பலா , வாழை  என்பன  முக்கனிகள்
5. தொடர்நிலை  தொடர் :
ஓர்  எழுவாய்  பல  பயனிலைகளைக்  கொண்டு  முடிவது  தொடர்நிலை  தொடர் .
 எ .கா : கார்மேகம்  கடுமையாக  உழைத்தார் ; அதனால்  வாழ்வில்  உயர்ந்தார் 
6. கலவைத்  தொடர் :
ஒரு  தனிச்சொற்றொடர்  ஒன்று  அல்லது  அதற்கு  மேற்பட்ட  துணைத்  தொடர்களுடன்  கலந்து  வருவது  கலவை  தொடர்.
எ .கா :நேற்று  புயல்  வீசியதால் , பள்ளிக்கு  விடுமுறை.
7. கட்டளைத்  தொடர் :
ஒரு  செயல்  அல்லது  சில  செயல்களைப்  பின்பற்றும்  படி  ஆணையிட்டுக்  கூறுவது  கட்டளைத்  தொடர் ஆகும் .
எ .கா :  பார்த்தப்போ , கவனமாகப்  படி
8. செய்வினைத்  தொடர் :
எழுவாய் செய்யும்  வினை  அமைந்த  தொடர்  செய்வினைத்  தொடர்  எனப்படும் .
எ .கா : மாவட்ட  ஆட்சியர்  கொடி  ஏற்றினர்
9. செயப்பாட்டு  வினைத்தொடர் :
இத்தொடரில்  செயப்படுபொருள்  , எழுவாய், பயனிலை  என்னும்  வரிசையில்  சொற்கள்  அமைந்துள்ளன . எழுவாயோடு "ஆல் "  என்னும்  மூன்றாம்  வேற்றுமை  சேர்க்கப்பட்டுள்ளது .
இவ்வகைத்  தொடரில்  "படு, பட்டது , பெறு , பெற்றது " என்னும்  துணை  வினைகளில்  ஒன்று  பயனிலையோடு  சேர்ந்து  வரும் .
எ .கா :
 உலகத்  தமிழ்ச்  செம்மொழி  மாநாடு  குடியரசு  தலைவரால்  தொடங்கி  வைக்கப்  பெற்றது .
10. தன்  வினைத்  தொடர் :
ஒரு  எழுவாய்  , ஒரு  செயலைத்  தானே  செய்வதால்  ,  தன்  வினைத்  தொடராகும்
எ .கா :
புரட்சிக் கொடி  திருக்குறள்  கற்றாள்
11. பிற  வினைத்  தொடர் :
ஒரு  எழுவாய் , ஒரு செயலை  பிறரைக்  கொண்டு  செய்விப்பதால் , பிற வினைத்  தொடராகும் .
எ .கா : புரட்சிக்கொடி  திருக்குறள் கற்பித்தால் 
12. நேர்க்கூற்று :
ஒருவர்  பேசுவதை , அவர்  பேசிய  படியே  கூறுவது  இத்தொடரின்  இயல்பு . இதில்  மேற்கோள்  குறிகள்  இடம்பெறும் ; தன்மை , முன்னிலை  பெயர்கள்  இடம்பெறும் ; இங்கு , இப்போது , இவை  எனச்   சுட்டுப்பெயர்கள்  வரும் .
தேன்மொழி  பொன்னியிடம் "நான்  நாளை  மதுரைக்குச்  செல்வேன் " என்றாள் 
13, அயற்கூற்றுத் தொடர் :
ஒருவர்  அல்லது  பலரின்  உரையாடல்  அயலார்  கூறுவது  போல்  அமைப்பது  ஆயர்கூற்று .
எ .கா :
 பொன்னியிடம்  தேன்மொழி  தான்  மறுநாள்  மதுரைக்கு செல்வதாகக்  கூறினாள் .
 14. உடன்  பாட்டுத்  தொடர் :
செயல்  அல்லது  தொழில்  நிகழ்வதை  மறுப்பின்றி  ஏற்பது உடன்  பாட்டுத்  தொடர்
எ .கா :
கலா  கட்டுரை  எழுதினால்
15. எதிர்மறைத்  தொடர் :
 செயல்  அல்லது  தொழில்  நிகழ்வதை மறுத்துக்  கூறுவதால் எதிர்மறைத்  தொடர்
எ .கா :
 கலா  கட்டுரை எழுதிலள்
16. பொருள்  மாறா  எதிர்மறைத்  தொடர் :
எ .கா : கலா  கட்டுரை  எழுதாமல்  இரால்
Share:

Amazon.in

Blogroll

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

Text Widget

model question 2012

TNPSC 2012  தமிழ் இலக்கணம்  1. 'ஆற்றீர் ' - வேர்ச் சொல்லை தேர்வு செய்  ஆற்றி  ஆற்றிய  ஆற்று  ஆற்றுதல்  2. பின...

இந்த வலைப்பதிவில் தேடு

Blogroll

Pages - Menu

Blogger Pages

Blogger templates

captain_jack_sparrow___vectorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Popular Posts

Recent Posts

Unordered List

Definition List

Ads Here

Pages

Theme Support