TNPSC Tamil Question

திங்கள், 30 ஏப்ரல், 2018

thogainilai thodar

தொகைநிலை தொடர் 


சொற்கள்  தொடராகும்  போது  இரு  சொற்களிடையே  வேற்றுமை , வினை , உவமை  முதலியவற்றுள்  ஏதேனும்  ஒன்று  மறைந்து  வரும் . இவ்வாறு  உருபுகள்  மறைந்து  வரும்  தொடர்கள்  "தொகைநிலை  தொடர்கள் " என்பர் .

தொகைநிலை  தொடரின்  வகைகள் :

  1. வேற்றுமைத்  தொகை 
  2. வினைத்  தொகை 
  3. பண்புத் தொகை 
  4. உவமைத்  தொகை 
  5. உம்மைத்  தொகை 
  6. அன்மொழித் தொகை 

1. வேற்றுமைத்  தொகை :

பெயர்ப்  பொருளை  வேறுபடுத்தி  காட்டும்  உறுப்புக்கு  வேற்றுமை  உருபு  என்பர் .
 1. முதல்  வேற்றுமை : உருபு  இல்லை
2. இரண்டாம்  வேற்றுமை : "ஐ "
எ .கா :   பால்  பருகினான்   = பால் + ஐ +பருகினான் (ஐ- என்னும்  உருபு   மறைந்து  வந்துள்ளது )
3. மூன்றாம்  வேற்றுமை : "ஆல் "
எ .கா :தலை  வணகிங்கினான் = தலை  + ஆல்  + வணங்கினான் .
4. நான்காம்  வேற்றுமை  உருபு :"கு "
 எ .கா : வேலன் மகன் = வேலன்  + கு +மகன் 
5. ஐந்தாம்  வேற்றுமை  உருபு : "இன் "

எ .கா :  ஊர்  நீங்கினான்  = ஊர்  + இன்  + நீங்கினான்
6. ஆறாம்  வேற்றுமை  உருபு : "அது "
எ .கா : செங்குட்டுவன் சட்டை  = செங்குட்டுவன்  + அது + சட்டை  
7. ஏழாம்  வேற்றுமை உருபு : "கண் "
எ .கா :  குகைப்புலி  = குகை + கண்  + புலி
8. எட்டாம்  வேற்றுமை  உருபு : உருபு  இல்லை

2. வினைத்  தொகை :

மூன்று  காலங்களையும்  ஏற்று  வருவது . காலங்காட்டும்  இடைநிலையும் பெயரெச்ச  விகுதியும்  மறைந்து  வரும்  பெயரெச்சம்  வினைத்தொகை  எனப்படும்
எ .கா :  உண்கலம் , ஆடுகொடி , பாய்புலி , அலைகடல்

3. பண்புத் தொகை :

பண்புப்  பெயர்கள் (வெண்மை , சதுரம் , வலிமை , நிலவு , கல் , சுவை ) ஆகிய  பெயர்ச் சொற்களோடு சேர்ந்து  வரும் போது  இரண்டிற்கும்  இடையில்  "ஆகிய , ஆன " என்னும்  பண்பு  உருபுகளும் 'மை ' விகுதியும்  தொக்கி  வருவது .
எ .கா : வெண்ணிலவு , சதுரக்கல் , இன்சுவை

4. உம்மை  தொகை : 

 எ .கா : கபில  பரணர் , உற்றார்  உறவினர் .
கபிலரும்  பரணரும் , உற்றாரும்  உறவினரும் , இடையிலும்  இறுதியிலும்  'உம் ' என்னும்  இடைச்சொல்  மறைந்து  வந்து  பொருள்  தருவது .

5. உவமைத்  தொகை :

எ .கா . கயல்விழி   வந்தால்
"கயல் போன்ற  விழி "  என்னும்  பொருளை த்தரும்  உவமைத்  தொகை

6.அன்மொழித்  தொகை :

 எ .கா : "கயல் போன்ற  விழியை  உடைய  பெண் "
என்னும்  தொடரில்  "உடைய " "போன்ற "  சொற்கள்  தொடரில்  இல்லாதவை , இவ்வாறு  உவமை  தொகை  அடுத்து  அல்லாத  மொழி  தொக்கி  வருவது  அன்  மொழி  தொகைத்  தொகை


Share:

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

Vina, vidai, oruporutpanmozhi

வினா , விடை , ஒருபொருட்பன்மொழி 

வினா :
வினா  ஆறு  வகைப்படும்

1. அறிவினா :
தான்  ஒரு  பொருளை  நன்கறிந்தும்  அப்பொருள்  பிறர்க்கு  தெரியுமா  என்பதை  அறியும்  பொருட்டு  வினவப்படும்
எ .கா :  திருக்குறளை  இயற்றியவர் யார் ? என  ஆசிரியர்  மாணவனிடம்  வினவுதல் .
2. அறியா வீணா :
 தான்  அறியாத  ஒரு பொருளை அறிந்துகொள்வதற்காக  பிறரிடம்  வினவுவது .
எ .கா : எட்டுத்தொகை  நூல்களுள் புறம் பற்றியன  எவை ? [ என மாணவன்  ஆசிரியரிடம்  வினவுவது ]
3. ஐய வினா :
தனக்கு  ஐயமாக  இருக்கின்ற  ஒருபொருள்  குறித்து , ஐயத்தை  போக்கி  கொள்வது ஐய வினா
எ .கா :அங்கே  கிடப்பது  பம்போ ? கயிறோ ?
4. கொளல் வினா :
 தான்  ஒரு பொருளை  வாங்கி  கொள்ளும்  பொருட்டு  கடை  காரரிடம் வினவும்  வினா .
எ .கா : பருப்பு  உள்ளதா ?
 5. கொடை  வினா :
தான்  ஒரு  பொருளைக்  கொடுப்பதற்காக,  அப்பொருள்  இருத்தலைப்  பற்றிப்  பிறரிடம்  வினவுவது
எ .கா : மாணவர்களே ! உங்களுக்கு  \சீருடை  இல்லையோ?
6. ஏவல் வினா:
ஒரு  தொழிலைச்  செய்யும்  படி ஏவும்  வினா
எ .கா :  மனப்பாடச்  செய்யுளை  படித்துவா ?


விடை  வகைகள் 

1. சுட்டு  விடை :  " சென்னைக்கு  வழி  யாது ? "  விடை : இது 

2. மறை  விடை :  "இது  செய்வாயா ? " விடை : " செய்யேன் " - மறுத்து கூறுவது

 3. நேர்  விடை :  "இது  செய்யவாயா  ?"  விடை: " செய்வேன் "  - உடன்பட்டுக்  கூறுதல்

4. ஏவல்  விடை :  " இது  செய்வாயா ?"  விடை : "நீயே  செய் "

5. வினாஎதிர்  வினாதல்  விடை : "இது  செய்யயா?" விடை : செய்யாமலிருப்பேனோ ?

6. உற்றுதுரைத்தல்  விடை : " இது  செய்வாயா ? " விடை : உடம்பு  நொந்தது (உற்றதை  விடையாகக்  கூறுவது )

7. உறுவது  கூறல் விடை: "செய்யவாயா ?" விடை : கை  வலிக்கும் .

8. இனமொழி  விடை : "ஆடுவாயா ? " விடை : பாடுவேன்


Share:

புதன், 25 ஏப்ரல், 2018

Sotrrodar vagaikal

சொற்றோடர்  வகைகள் 

1. செய்தித்  தொடர் :
ஒரு  கருத்தினைச்  செய்தியாக  தெரிவிப்பது .
எ .கா : திருவள்ளுவர்  திருக்குறளை  இயற்றினார்
2. வினாத் தொடர் :
வினாப்  பொருளைத்  தரும்  தொடர் .
எ .கா : என்ன ? ஏன் ? எப்படி ?
3. உணர்ச்சித்  தொடர் :
பேசும்  செய்திகள்  உணர்ச்சியை  வெளிப்படுத்தும்  தொடர்களாக   அமைந்தால்  உணர்ச்சித்  தொடர்  ஆகும் .
எ .கா : என்னே ! இமயமலையின்  உயரம் !
4. தனிநிலைத்  தொடர் :
ஓர்  எழுவாய்  (அ ) பல  எழுவாய்  ஒரு  பயனிலையை  கொண்டு  முடிவது தனிநிலை  தொடர் .
எ .கா :
அழகன்  பாடம்  எழுதுகிறான் .
மா  , பலா , வாழை  என்பன  முக்கனிகள்
5. தொடர்நிலை  தொடர் :
ஓர்  எழுவாய்  பல  பயனிலைகளைக்  கொண்டு  முடிவது  தொடர்நிலை  தொடர் .
 எ .கா : கார்மேகம்  கடுமையாக  உழைத்தார் ; அதனால்  வாழ்வில்  உயர்ந்தார் 
6. கலவைத்  தொடர் :
ஒரு  தனிச்சொற்றொடர்  ஒன்று  அல்லது  அதற்கு  மேற்பட்ட  துணைத்  தொடர்களுடன்  கலந்து  வருவது  கலவை  தொடர்.
எ .கா :நேற்று  புயல்  வீசியதால் , பள்ளிக்கு  விடுமுறை.
7. கட்டளைத்  தொடர் :
ஒரு  செயல்  அல்லது  சில  செயல்களைப்  பின்பற்றும்  படி  ஆணையிட்டுக்  கூறுவது  கட்டளைத்  தொடர் ஆகும் .
எ .கா :  பார்த்தப்போ , கவனமாகப்  படி
8. செய்வினைத்  தொடர் :
எழுவாய் செய்யும்  வினை  அமைந்த  தொடர்  செய்வினைத்  தொடர்  எனப்படும் .
எ .கா : மாவட்ட  ஆட்சியர்  கொடி  ஏற்றினர்
9. செயப்பாட்டு  வினைத்தொடர் :
இத்தொடரில்  செயப்படுபொருள்  , எழுவாய், பயனிலை  என்னும்  வரிசையில்  சொற்கள்  அமைந்துள்ளன . எழுவாயோடு "ஆல் "  என்னும்  மூன்றாம்  வேற்றுமை  சேர்க்கப்பட்டுள்ளது .
இவ்வகைத்  தொடரில்  "படு, பட்டது , பெறு , பெற்றது " என்னும்  துணை  வினைகளில்  ஒன்று  பயனிலையோடு  சேர்ந்து  வரும் .
எ .கா :
 உலகத்  தமிழ்ச்  செம்மொழி  மாநாடு  குடியரசு  தலைவரால்  தொடங்கி  வைக்கப்  பெற்றது .
10. தன்  வினைத்  தொடர் :
ஒரு  எழுவாய்  , ஒரு  செயலைத்  தானே  செய்வதால்  ,  தன்  வினைத்  தொடராகும்
எ .கா :
புரட்சிக் கொடி  திருக்குறள்  கற்றாள்
11. பிற  வினைத்  தொடர் :
ஒரு  எழுவாய் , ஒரு செயலை  பிறரைக்  கொண்டு  செய்விப்பதால் , பிற வினைத்  தொடராகும் .
எ .கா : புரட்சிக்கொடி  திருக்குறள் கற்பித்தால் 
12. நேர்க்கூற்று :
ஒருவர்  பேசுவதை , அவர்  பேசிய  படியே  கூறுவது  இத்தொடரின்  இயல்பு . இதில்  மேற்கோள்  குறிகள்  இடம்பெறும் ; தன்மை , முன்னிலை  பெயர்கள்  இடம்பெறும் ; இங்கு , இப்போது , இவை  எனச்   சுட்டுப்பெயர்கள்  வரும் .
தேன்மொழி  பொன்னியிடம் "நான்  நாளை  மதுரைக்குச்  செல்வேன் " என்றாள் 
13, அயற்கூற்றுத் தொடர் :
ஒருவர்  அல்லது  பலரின்  உரையாடல்  அயலார்  கூறுவது  போல்  அமைப்பது  ஆயர்கூற்று .
எ .கா :
 பொன்னியிடம்  தேன்மொழி  தான்  மறுநாள்  மதுரைக்கு செல்வதாகக்  கூறினாள் .
 14. உடன்  பாட்டுத்  தொடர் :
செயல்  அல்லது  தொழில்  நிகழ்வதை  மறுப்பின்றி  ஏற்பது உடன்  பாட்டுத்  தொடர்
எ .கா :
கலா  கட்டுரை  எழுதினால்
15. எதிர்மறைத்  தொடர் :
 செயல்  அல்லது  தொழில்  நிகழ்வதை மறுத்துக்  கூறுவதால் எதிர்மறைத்  தொடர்
எ .கா :
 கலா  கட்டுரை எழுதிலள்
16. பொருள்  மாறா  எதிர்மறைத்  தொடர் :
எ .கா : கலா  கட்டுரை  எழுதாமல்  இரால்
Share:

Agupeyar

ஆகுபெயர் 

ஒன்றன்  இயற்பெயர்  தன்னைக்  குறிக்காமல்  தன்னோடு  தொடர்புடைய  வேறொரு  பொருளுக்கு  ஆகி  வருவது.

1. முதலாகுபெயர்  (அ ) பொருளாகுபெயர் :
எ .கா: மல்லிகை  சூடினாள்
மல்லிகை  என்பது  கொடியாகிய  முதற்பொருளை  குறிக்காமல்  பூ  என்னும்  சினையைக்  குறிக்கிறது .
2. இடவாகுபெயர் :
 எ .கா: பூண்டிப்  பள்ளியா  வந்து  பேசியது ?
 'பள்ளி' என்னும்  இடப்பெயர்  அப்பள்ளியில்  பயிலும்  மாணவிக்கு  ஆகி  வந்தது .
3. காலவாகுபெயர் :
எ .கா: திசம்பர் பூ 
 திசம்பர் என்னும்  மாதப்  பெயர்  அம்மாதத்தில்  பூக்கும்  பூவிற்கு  ஆகி  வந்தது .
4. சினையாகு  பெயர் :
எ .கா ;  வெற்றிலை  நட்டான்
'வெற்றிலை '  என்பது  சினையாகிய  இலையை  குறிக்காமல்  அதன்  முதல்  பொருளாகிய  கொடிக்கு  ஆகி  வந்தது
 5. பண்பாகுபெயர் :
எ .கா : வெள்ளை  அடிப்போம்
'வெள்ளை '  என்பது  நிறப்பண்பு  அது  நிறத்தை  குறிக்காமல்  சுண்ணாம்பைக்  குறித்து  வந்தது .
6. தொழிலாகுபெயர் :
எ .கா : பொங்கல்  உண்போம்
"பொங்கல் "  என்பது  பொங்குதலாகிய  தொழிற்பெயர் . தொழிலை  குறிக்காமல்  , அத்தொழிலால்  ஆகும்  உணவை  குறிக்கும்
 7. எண்ணல்  அளவை  ஆகுபெயர் :
எ .கா :  ஒன்று  பெற்றால்  ஒளிமயம்
"ஒன்று "  என்னும்  எண்ணுப்பெயர்  , அவ்வெண்ணுக்குத்  தொடர்புடைய  குழந்தைக்குப்  பெயராகி  வந்தது.
8. எடுத்தல்  அளவை ஆகுபெயர் :
எ .கா : ஐந்து  கிலோ  என்ன  விலை ?
 'ஐந்து ' அளவை  குறிக்காமல்  அவ்வளவுடைய  பொருளுக்கு  (அரிசி , பருப்பு ) ஆகி  வருவது .
9. முகத்தல்  அளவை  ஆகுபெயர் :
எ .கா : நான்கு  லிட்டர்  தேவை
'லிட்டர் '  என்னும்  முகத்தல்  அளவைப்  பெயர் , அவ்வளவை  குறிக்காமல்  , அவ்வளவுடைய  நெய் , எண்ணெய் , முதலியவற்றுள்  ஒன்றை  குறிக்கும் .
10. நீட்டல்  அளவை  ஆகுபெயர் :

எ .கா : மூன்று  மீட்டர்  கொடு
'மீட்டர் '   அளவு  கோலைக்  குறிக்காது  அதனால்  அளக்க  பெறும்  துணிக்கு  ஆகிவந்தது
11. சொல்லாகு  பெயர் :
எ .கா : வள்ளுவர்  சொல்  வாழ்க்கைக்கு  இனிது
 "வள்ளுவர்சொல் " என்பது  சொல்லைக்  குறிக்காது  பொருளுக்கு  பெயராகி  வந்ததால்  இது  சொல்லாகுபெயர்
 12. தனியாகுபெயர் :
எ .கா : பாலை  இறக்கு
'பாலின் '  பெயர்  பாலைக்  குறிக்காமல்  பாத்திரத்தை  குறிக்கிறது. ஓர்  இடத்தில்  உள்ள  ஒரு  பொருளின் பெயர் (தானி ) அது  சார்ந்திருக்கும்  இடத்திற்கு  (தானத்திற்கு ) பெயராகி  வருவது .
 13. கருவியாகு பெயர் :
எ .கா : யாழ்  கேட்டு  மகிழ்ந்தாள்
'யாழ் '  என்னும்  கருவி  இசைக்கு  ஆகி  வருவது.
 14. காரியவாகுபெயர் :
எ .கா : நான்  சமையல்  கற்றேன்
 'சமையல் ' என்னும்  காரியத்தின்  பெயர்  அதன்  காரணத்திற்கு  பெயராகி  வருவது .
 15. கருத்தாவாகு  பெயர் :
எ .கா : திருவள்ளுவரைப்  படித்துப்பார்
 'திருவள்ளுவர் ' என்பது  அவரால்  இயற்றப்  பெற்ற  நூலுக்கு  ஆகிவந்ததால்  கருத்தாவாகு  பெயர் .
16. உவமையாகு  பெயர் :
 எ .கா : நாரதர்  வருகிறார்
 'நாரதர் '  என்னும்  பெயர்  அவரை  குறிக்காமல்  அவரைப்  போன்ற  வேறொருவருக்கு  ஆகி வருவது .
 17. இருமடியாகு  பெயர் :
எ .கா : புளி  காய்த்தது
 'புளி ' பழத்திற்கு ஆகி , பின்பு  அப்பழத்தை  உடைய மரத்திற்கும்  ஆகி  வந்துள்ளது . ஒரு  சொல்  இரண்டு  நிலையில்  ஒன்றோடுஒன்று  தொடர்புடைய  பொருளுக்கு  ஆகி  வருவது 
18. அடையெடுத்தவாகு  பெயர் :
எ .கா : வெற்றிலை  நட்டான்
வெற்றிலை  = வெறுமை  + இலை  - வெறுமை  இலை  என  அழைக்கப்பட்டு  வெற்றிலையாகியது  . வெறுமை  என்பது  இலைக்கு  அடையாகும் . இலை  என்பது  அடைக்குரிய  பொருளாகும் .
இலைக்குரிய  அடையான வெறுமையைச்  சேர்த்து  'வெற்றிலை நட்டான் '  என்னும்  பொது  அடையும்  (வெறுமை ) , சினையும் (இலை )   அதன்  முழுப்பொருளுக்கு  ஆகி  வருவது .
19. இருபெயரொட்டு  ஆகுபெயர் :
இரண்டு  பெயர்ச்  சொற்கள்  சேர்ந்து  ஒரு  பொருளை  குறிப்பதுண்டு. இரண்டு  சொற்களுள்  ஒன்று  சிறப்பு  பெயராகவும்  , மற்றொன்று  பொதுப்  பெயராகவும்  அமைந்து  ஒரே  பொருளைக்  குறிப்பது .
 எ .கா : வாழை  மரம் 
 வகரக்  கிளவி ( வகரம் - சொல் , கிளவி - சொல் )
வாழை  -  மரவகையில்  ஒன்றின்  சிறப்பு  பெயராகும் . மரம்  - பொது  பெயர் , இரண்டும் சொற்களும்  சேர்ந்து ஒரு  பொருளை  குறிக்கும்.

20. விட்டவாகு  பெயர் :
எ .கா : சென்னை  வளர்கிறது
சென்னை - இடத்தை  குறிக்காமல்  , தன்னிடத்தில்  வாழும்  மக்களை  குறிக்கும் .

21. விடாத  ஆகுபெயர் :
எ .கா : இனிப்புத்  தின்றான்
இனிப்பு - என்னும்  சுவையை  குறித்த  சொல்  , தனக்குரிய  இனிமைப்  பொருளை விட்டு  விடாமல்  அச்சுவையை  உடைய  தின்பண்டத்தைக்  குறிக்கும்
Share:

திங்கள், 23 ஏப்ரல், 2018

Ani

அணி 

அணி  - செய்யுட்களில்  காணப்படும்  அழகு அணி எனப்படும் .

1. ஏகதேச  உருவக  அணி :
  பல  பொருள்களை  உருவகப் படுத்திக்  கூறும்  போது  ஒன்றை  மட்டும்  உருவகப்படுத்தி  அதனோடு  தொடர்புடைய  மற்றோன்று  உருவகப் படுத்தாமல்  வருவது
எ .கா :
பிறவிப்  பெருங்கடல்  நீந்துவர்  நீந்தார்
இறைவன்  அடிசேரா  தார்
[பிறவியை  கடலாக உருவக  படுத்தி  விட்டு , இறைவனடியை  தெப்பமாக  உருவகப்  படுத்தாமல்  வருவது ]
2. இல்பொருள்  உவமை  அணி :
உலகில்  இல்லாத  பொருளை  ஒன்றிற்கு  உவமையாக்கி  கூறுவது இல்பொருள்  உவமை  அணி எனப்படும்.
எ .கா :
 அன்பகத்  தில்லா  உயிர்வாழ்க்கை  வன்பாற்கண் 
 வற்றல்  மரந்தளிர்த்  தற்று
 3. பிறிது  மொழிதல்  அணி :
தான்  கருதிய  பொருளை  நேரடியாகச்  சொல்லாமல்  அதனோடு  தொடர்பு  உடையனவற்றைச்  சொல்லி  விளங்க  வைப்பது  பிறிது  மொழிதல்  அணி எனப்படும் 
எ .கா :
பீலிபெய்  சாகாடும்  அச்சிறும்  அப்பண்டம்
சால  மிகுத்துப்  பெயின்
[மயிலின்  இறகு  மிகவும்  மென்மையானதாக  இருந்தாலும்  அளவுக்கு  அதிகமாக ஏற்றினால்  வலிமையான  அச்சாணி  முரிந்துவிடும் ]
 4. வேற்றுமையணி :
செய்யுளில்  இருபொருள்களுக்கு  இடையே  உள்ள  ஒப்புமையைக்  கூறிய  பின்னர்  அவற்றை  வேறுபடுத்தி  காட்டுவது  வேற்றுமையணி  ஆகும்
எ .கா :
தீயினால்  சுட்டபுண்  உள்ளாறும்  ஆறாதே
 நாவினால்  சுட்ட  வடு 

5. நிரல்நிறை அணி :
சொல்லையும்  பொருளையும்  வரிசையாக (நிரலாக )  நிறுத்தி  நேரே  பொருள்கொள்வது  நிரல்நிறை  அணி
எ .கா :
அன்பும்  அறனும்  உடைத்தாயின்  இல்வாழ்க்கை
பண்பும்  பயனும்  அது .
Share:

Punarchi

புணர்ச்சி 

நிலைமொழியின்  ஈறும்  வருமொழியின்  முதலும்  சேருவது  புணர்ச்சி  ஆகும் 

இயல்பு  புணர்ச்சி :
இரு  சொற்கள்  இயல்பாக  புணர்கின்றன
எ .கா :
 வாழை + மரம்  = வாழைமரம் 
விகாரப்  புணர்ச்சி :
வாழைப்பழம் =  வாழை  + பழம்
இரண்டு  சொற்கள்  இணையும்  போது  "ப் " என்ற  மெய்  தோன்றுகிறது . 
 விகாரப்   புணர்ச்சி மூன்று  வகைப்படும் :
1. தோன்றல் - தமிழ் +பாடம்  = தமிழ்ப்பாடம்
 2. திரிதல்  - கல்  +  சிலை  = கற்சிலை  
3. கெடுதல்  - மரம்  + வேர்  = மரவேர்

Share:

porulkol

பொருள்கோள்

ஒரு  செய்யுளில்  உள்ள  சீர்களையோ  அடிகளையோ  பொருள்  உணர்வுக்கு  ஏற்ற  வகையில்  அமைத்துக்  கொள்ளும்  முறையை  பொருள்கோள் .

பொருள்கோள்  எட்டு  வகைப்படும் :

  1. ஆற்று  நீர்ப்  பொருள்கோள்
  2.  மொழிமாற்று  பொருள்கோள்
  3. நிரல்நிறை ப்  பொருள்கோள்
  4. விற்பூட்டுப் பொருள்கோள்
  5. தாப்பிசைப்  பொருள்கோள்
  6. அளைமறி  பாப்புப்   பொருள்கோள்
  7. கொண்டு கூட்டுப்   பொருள்கோள்
  8. அடிமறி  மாற்றுப்பொருள்கோள்
1.  ஆற்று  நீர்ப்  பொருள்கோள்:
இடையறாத செல்லும்  ஆற்று  நீரைப்   போல  பாடலின்  சொற்கள்  முன் பின்  மாறாது  நேரே  சென்று  பொருள்  கொள்வது ஆற்று  நீர்ப்  பொருள்கோள் ஆகும் .
 எ .கா :
பொறிவாயில்  ஐந்தவித்தான்   பொய்யர்  ஒழுக்க
 நெறிநின்றார்  நீடுவாழ்  வார் 
2. மொழிமாற்று  பொருள்கோள்:
 ஓரடியுள்  உள்ள  சொற்களை  அவை  தரும்  பொருளுக்கு  ஏற்ப  மாற்றிக்  கூறுதல் மொழிமாற்று  பொருள்கோள் ஆகும் 
எ .கா :
அருளல்லது  யாதெனில்  கொல்லாமை  கோறல்
பொருளல்லது  அவ்வூன்  தினல்
[அருள்  யாதெனில்  கொல்லாமை ; அருள்  அல்லது  யாதெனில் உயிர்க்   கொலை  எனப்  பொருள் ]
 3. நிரல்நிறை ப்  பொருள்கோள்:
 மாறி மாறி  இருக்கின்ற  சொற்களை  வரிசையாக  அமைத்துப்  பொருள்கொள்வது  நிரல்நிறை ப்  பொருள்கோள் ஆகும் .
எ .கா :
அன்பும்  அறனும்  உடைத்தாயின் இல்வாழ்க்கை
 பண்பும்  பயனும்  அது .
[இக்குறட்பாவில்  அன்பிற்கும்ப்  பண்பும்  ,அறத்துக்குப்  பயனும்  நிரல்  நிறையாக  வந்து  அமைந்துள்ளதால் நிரல்நிறை ப்  பொருள்கோள்  ]
 4. விற்பூட்டுப்  பொருள்கோள் :
வில்லின்  இருமுனைகளையும்  இணைத்து  கட்டுதல்  போல செய்யுளின் முதலில்  அமைந்துள்ள  சொல்லும், இறுதியில்  அமைந்துள்ள  சொல்லும்  பொருள்  படப் பொருத்துவது விற்பூட்டு  பொருள்கோள்  அல்லது  பூட்டுவிற்  பொருள்கோள்
 எ .கா :
 நெருநல்  உளன்ஒருவன்  இன்றில்லை  என்னும்
பெருமை  உடைத்திவ்  வுலகு
5.  தாப்பிசைப்  பொருள்கோள்:
ஊஞ்சலின்  நடுநின்ற  கயிறு  முன்னும்  பின்னும்  சென்று  வருவது  போல செய்யுளின்  நடுவில்  அமைந்திருக்கும்  சொல் , செய்யுளின்  முதலிலும்  இறுதியிலும்  அமைந்திருக்கும்  சொற்களுடன்  பொருந்திப்  பொருளை  தருவது  தாப்பிசைப்  பொருள்கோள்.
தாம்பு + இசை  = தாப்பிசை
எ .கா :
இறந்தார்  இறந்தார்  அனையர்  சினத்தைத்
துறந்தார்  துறந்தார்  துணை
 6. அளைமறி  பாப்புப்   பொருள்கோள்:
பாம்பு  புற்றில்  தலை  வைத்து  நுழையும் போது  , தலை  மேலாகவும்  உடல்  அடுத்தும்  செல்வது  போலச்  செய்யுளின்  இறுதியிலிருந்து  சொற்களை  எடுத்து  முதலில்  வைத்துக் 
கூட்டிப் பொருள்  கொள்வது  அளைமறி  பாப்புப்   பொருள்கோள் (அளை - புற்று , பாப்பு - பாம்பு )
7.  கொண்டு கூட்டுப்   பொருள்கோள்:
 செய்யுளின்  பல  அடிகளிலும்  கூறப்பட்டுள்ள சொற்களைப்  பொருளுக்கு  ஏற்பக்  கூட்டிப்  பொருள் கொள்வது  கொண்டு கூட்டுப்   பொருள்கோள்
 8. அடிமறி  மாற்றுப்பொருள்கோள்:
 செய்யுளின்  எல்லா  அடிகளையும்  முன்பின்னாக  மாற்றிப்  பொருள்  கொண்டாலும்  பொருளும்   ஓசையும்  சிதையாமல்  வருவது  அடிமறி  மாற்றுப்பொருள்கோள்.

Share:

சனி, 14 ஏப்ரல், 2018

vazha nilai, vazhu, vazhuvamaithi

வழா நிலை , வழு , வழுவமைதி 

வழா நிலை :
  • இலக்கண முறைபடி  குற்றமில்லாது  பேசுவதும் , எழுதுவதும்  வழா நிலை எனப்படும் .
வழா நிலை ஆறு  வகைப்படும் :
  • திணை வழா நிலை:  செல்வி பாடினாள் 
  • பால் வழா நிலை: கண்ணன்  வந்தான் 
  • இட வழா நிலை: நான்  வந்தேன் 
  • கால வழா நிலை:  நாளை  வருவேன் 
  • வினா வழா நிலை: தமிழ்  இலக்கணம்  எத்தனை வகைப்படும் ?
  • விடை வழா நிலை: தமிழ் நாட்டின்  தலைநகரம் எது ? சென்னை .


வழு  நிலை :
  • இலக்கண  முறையின்றி  பேசுவதும்  எழுதுவதும்  வழு எனப்படும் 
வழுநிலை ஏழு வகைப்படும் :
  1. திணை வழு : என்  மாமா  வந்தது 
  2. பால்வழு : கண்ணகி  வந்தான் 
  3. இடவழு : நாங்கள்  வந்தாள் 
  4. காலவழு : கரிகாலன்  நாளை  வந்தான் 
  5. வினாவழு : முட்டையிட்டது  சேவலா  பெட்டையா ?
  6. விடைவழு :  நாளை  பள்ளி  திறக்கப்படுமா ? விடை : அத்தைக்கு  உடல்நலமில்லை ?
  7. மரபுவழு : நாய்  கத்தும் .
வழுவமைதி :
  • இலக்கண  முறைப்படி  குற்றமுடையது  எனினும்  இலக்கண  ஆசிரியர்களால் குற்ற  மன்று  என்று  ஏற்றுக் கொல்லப்படுவது  வழுவமைதி
  1.  
Share:

sol

சொல் 

ஓர்  எழுத்தானது  தனித்தேனும் , ஒன்றுக்கு  மேற்பட்ட  எழுத்துகள்  தொடர்ந்து  ஒரு பொருளை உணர்த்துமானால்  சொல் எனப்படும் .

சொல்லின்  வேறுபெயர்கள் : பதம், மொழி , கிளவி 

சொல் பாகுபாடு :


இலக்கண வகை :

  1. பெயர்ச்சொல் 
  2. வினைச்சொல் 
  3. இடைச்சொல் 
  4. உரிச்சொல் 

இலக்கியவகை :

  1. இயற்சொல் 
  2. திரிசொல் 
  3. திசைச்சொல் 
  4. வடசொல் 
 1. இயற்சொல் :
இயற்சொல் என்பது இயல்பாகப் பொருள் உணரும் சொல்லாகும்
  • மண் , பொன்  - பெயர் இயற்சொல் 
  • நடந்தான் , வந்தான்  - வினை இயற்சொல் 
  • அவனை , அவனால்  - இடைஇயற்சொல் 
  • அழகு , அன்பு  - உரி இயற்சொல் 
2. திரிசொல் 
திரிசொல் என்பது கற்றோர்க்கு மட்டும் பொருள் விளங்கக்  கூடியது என்பதும்  இயற்சொல்லில் வேறுபட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.
  • கிள்ளை , சுகம் , தத்தை - கிளி - பெயர்த்திரிசொல் 
  • யானை ,  கோழி , சங்கு  - வாரணம் 
  •  கழறினான் , செப்பினான் , பகர்ந்தான் 
  • நீக்கினான் , கொண்டான்  - வரைந்தான் - வினைதிரிசொல் 
  •  சேரும் , வருதும் , கொல் - இடைதிரிசொல்
  •  சால , உறு , தவ ,நனி , கூர் , கழி  - மிகுதி  - உரிதிரிசொல் 
  • காப்பு , கூர்மை , அச்சம் ,கரிப்பு , விளக்கம், சிறப்பு ,மணம்  - உரிதிரிசொல் 
.3. திசைச்சொல் 
 கொடுந்தமிழ் நாடுகள் 12 பெயர்கள் :
  1. தென்பாண்டி நாடு 
  2. குட்டநாடு 
  3. குடநாடு 
  4. கற்காநாடு 
  5. வேள்நாடு 
  6. பூழி நாடு 
  7. பன்றி நாடு 
  8. அருவா நாடு 
  9. அருவா  வட தலை 
  10. சீத நாடு 
  11. மலைய மான் நாடு 
  12. புனல் நாடு (அ ) சோழ நாடு
 4. வடசொல் :
ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொது எழுத்தும் , தமிழை ஒத்து வடதிசையிலிருந்து செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன வட சொல் எனப்படும் .
  •  
ஓரெழுத்துக்களால் ஆகிய சொற்கள் 42:
  • ஆ ,ஈ ,ஊ ,ஏ ,ஐ ,ஓ - உயிர்  வருக்கத்தில்  ஆறு 
  • மா ,மீ ,மூ,மை ,மோ  - மகர  வருக்கத்தில் ஐந்து 
  • தா , தீ ,தூ ,தே , தை  - தகர  வருக்கத்தில் ஐந்து 
  • பா ,பூ , பே ,பை ,போ  - பகர  வருக்கத்தில் ஐந்து 
  • நா ,நீ , நே , நை ,நோ  - நகர வருக்கத்தில்ஐந்து 
  • கா , கூ ,கை , கோ  - ககர வருக்கத்தில் நான்கு 
  • வா , வீ ,,வை ,வெள   - வகர வருக்கத்தில் நான்கு 
  • சா ,சீ ,சே ,சோ  - சகர வருக்கத்தில் நான்கு 
  • யா  - யகர  வருக்கத்தில் ஒன்று 
  • நொ , து  - தனி  குறில்  பதம் இரண்டு

பதம் :

  1.  பகுபதம் ( இரண்டு (2) எழுத்து முதல் ஏழு  எழுத்துக்கள்(7)  வரை  வரும் )
  2. பகாப்பதம் (இடைச்சொல்லும் , உரிச்சொல்லும்  பகா பதங்களாகவே இருக்கும் )(இரண்டு (2) எழுத்து முதல் ஒன்பது  எழுத்துக்கள்(9)  வரை  வரும் )

பகாப்பதம் :

  • பிரித்தல்  பொருள்  தராத  சொல்  பகாப்பதம் .
பகாப்பதம்  நான்கு  வகைப்படும் :
  1. பெயர்ப்  பகாப்பதம்  -  மரம் , நாய் , நீர்
  2. வினைப்  பகாப்பதம்  - உண் , காண் , எடு
  3. இடைப்பகாப்பதம் - தில் , மன் , பிற
  4. உரிப்  பகாப்பதம் - சால , உறு , நனி , கடி

 பகுபதம் :

  • பகுதி , விகுதி , இடைநிலை , எனப் பிரிக்கப் படும்  பதம்  பகுபதம் .
பகுபதம்  இரண்டு  வகைப்படும் :
  • பெயர்ப்பகுபதம்  
  • வினைப்  பகுபதம் 

பெயர்ப்பகுபதம் :

  • பொருள் , இடம் , காலம்  , சினை , குணம் , தொழில்  ஆகியவற்றை  அடியாக  கொன்டு  தோன்றுவது .
எ .கா :
  •  பொன்னன்  =  பொன் + ன் + அன்( பொன் -பொருட்பெயர் அடியாக  உள்ளது )
  • ஊரான்  = ஊர்  +  அன்  (ஊர் - இடப்பெயர்  அடியாக  உள்ளது )
  • ஆதிரையான் = ஆதிரை + ய் + ஆன் (ஆதிரை- காலப்பெயர் )
  • கண்ணன் = கண் +ண் +அன்  (கண் - சினை  பெயர் )
  • கரியன் = கருமை  + அன்  (கருமை - பண்புப்பெயர் )
  • நடிகன் = நடி + க் + அன் ( நடி - தொழிற்  பெயர் )

 வினைப்  பகுபதம் : 

  • எ .கா : செய்தான் = செய் + த் + ஆன்
Share:

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

vinai sol

வினைச்சொல் 

ஒரு எழுவாய் செய்யும் செயலை  (இயக்கத்தை ) (அ ) தொழிலை  குறிப்பதால்  இச்சொல் வினைச்சொல் (அ ) காலத்தை குறிப்பது .

எ .கா : இராமன் வந்தான்

வினை முற்று :

  •  தன்  பொருளில்  முற்றுப்  பெற்று  வந்துள்ள  வினைச்  சொற்கள்  வினைமுற்றுகள்  என்பர் .
  • ஆன்  - என்னும்  விகுதி கொண்டு  முடியும் .
  • முக்காலத்தில்  ஒன்றை  உணர்த்தும் , திணை , பால் , எண் , இடம்   

வினை முற்று  இரு  வகைப்படும் :


  • தெரிநிலை வினைமுற்று : - (காலத்தை  வெளிப்படையாக  காட்டும்)

எ .கா : உழுதான்
செய்பவன்  =  உழவன்
கருவி - கலப்பபை 
நிலம் - வயல் 
செயல் - உழுதல் 
காலம் = உழுதான் 
செய்பொருள்  - நெல் 
  • குறிப்பு வினைமுற்று : (ஆறு  கருத்துகளில்  ஒன்றை  மட்டும்  தெரிவித்து  காலத்தை குறிப்பாக  காட்டும்.

எ .கா : அவன்  உழவன்  


எச்சம் :

  •  முற்று  பெறாத  முழுமையடையாத  வினை சொற்கள்  எச்சம் எனப்படும் .

 வினையெச்சம் :

  • ஓர்  எச்ச வினை , வினையைக்  கொண்டு  முடிந்தால்  அது  வினையெச்சம் எனப்படும் .
  • இறந்தகால  வினையெச்சம் - படித்து வந்தான் 
  • நிகழ்கால  வினையெச்சம் - படித்து  வருகின்றான் 
  • எதிர்கால வினையெச்சம் - படித்து  வருவான்

 வினையெச்சம்  இரு வகைப்படும் :

  • தெரிநிலை  வினையெச்சம் :

  • காலத்தையும் , செயலையும்  உணர்த்தி  வினைமுற்றைக்  கொண்டு  முடியும்  எச்சவினை தெரிநிலை  வினையெச்சம்
எ .கா : படித்து  தேறினான் .
  • குறிப்பு  வினையெச்சம் :

  • பண்பின்  அடிப்படையில்  பொருளை  உணர்த்தி  நின்று  வினைமுற்றை கொண்டு  முடிந்துள்ளன .
எ .கா : மெல்லப்  பேசினான்

முற்றெச்சம்  : 

  • ஒரு  வினைமுற்று  சொல்  எச்ச  பொருளில்  வந்து  மற்றொரு வினைமுற்றை  கொண்டு  முடிவதே முற்றெச்சம் எனப்படும் .
  • எ .கா :  நந்தினி  வந்தனள் ,  போயினள்
Share:

திங்கள், 9 ஏப்ரல், 2018

Peyarsol

பெயர்ச்சொல் 

பெயரையும்  இடத்தையும் குறித்து வந்தால் பெயர்ச்சொற்கள்  ஆயின 

எ .கா : மதுரை , அம்மா ,அப்பா 


பெயர்ச்சொற்கள்  ஆறு  வகைப்படும் :

  1. பொருட்பெயர் 
  2. இடப்பெயர் 
  3. காலப்பெயர் 
  4. சினைப்பெயர் 
  5. பண்புப்பெயர்  (அ ) குணப்பெயர்
  6. தொழிற்பெயர் 
1. பொருட்பெயர் :
  • உயிருள்ள பொருள்  -   தென்னை
  •  உயிரற்ற  பொருள்  -  நாற்காலி 
2.  இடப்பெயர் :
  • ஒரு  இடத்தை  குறிப்பது - எ .கா :  வீடு ,  பள்ளி ,  தெரு
3.காலப்பெயர் :
  • கண் இமைக்கும்  நொடிப் பொழுது  முதல்   ஊழிக்காலம்  வரை  எல்லா  காலத்தை  குறிக்கும்  பெயர்கள் .
  • எ .கா : நொடி ,விநாடி , மணி , பொழுது ,  கிழமை , வாரம் , ஆண்டு
 4. சினைப்பெயர்  :.
  • சினை  என்பது  ஒன்றன்  உறுப்பைக்  குறிப்பது  , மனித  உறுப்புகள் , விலங்கு  உறுப்புகள் , தாவரப்பகுதிகள் , பொருட்களின்  பகுதிகள்  என முழுமையான ஒன்றின்  பகுதிகளை  குறிக்கும்  பெயர்கள் சினைப்பெயர்கள் .

5.குணப்பெயர்கள்  (அ ) பண்புப்பெயர் :
  •  நிறம் , சுவை , அளவு , வடிவம் அடிப்படையில்  தோன்றும்.
  • பண்புப்பெயர்  விகுதிகள் :
    • மை , ஐ , சி , உ , கு ,றி , று , அம், நர் , பம் , து , மன் , இல் .
     எ .கா :
     நன்மை  = நல்  + மை 
    தொல்லை  = தொல்  + ஐ
    மாட்சி = மாண் + சி
    மாண்பு  = மாண் + பு
    நன்கு  = நல்  + கு
    நன்றி  = நல் + றி
    நலம்  = நல்  + அம்
    தீது  = தீமை + து

 6.தொழிற்பெயர் :
  • தொழிலை  குறிப்பது -  எ .கா : மாதவி  ஆடல்  கண்டு  கோவலன்  மகிழ்ந்தான் .
  • ஆடு + அல்  = ஆடல்  -  அல்  = தொழிற்பெயர் விகுதி.
 தொழிற்பெயர்  விகுதிகள் :
  •  தல் , அல் , அம் , ஐ , வை , கை , கு , பு , உ , தி , சி , வி , உள் , காடு , பாடு , அரவு , ஆணை , மை , து .
எ .கா :
  •  பெறுதல்  =  பெறு+தல்
  • ஆட்டம்  =  ஆடு + தல்
  • பறவை  = பற + வை
  • தோற்றரவு = தோற்று  + அரவு
  • பாய்த்து = பாய் + து
  •  கோடல் = கோடு + அல் 
  • வாழ்க்கை  = வாழ் + கை
  • வரவு  = வர  + உ
தொழிற்பெயர்  வகைகள் :
  • முதனிலை  தொழிற்பெயர் .
    தொழிற்பெயர்  விகுதிகளே இல்லாமல்  பகுதி  மட்டும்  வந்து  தொழில்  புரிவதற்கு  முதனிலை  தொழிற்பெயர் எனப்படும்
 எ .கா : கபிலனுக்கு  அடி விழுந்தது 
  •  முதனிலை திரிந்தத் தொழிற்பெயர்:
தொழிற்பெயரின்  முதனிலையாகிய  பகுதி  திரிந்து வருவது முதனிலை திரிந்தத் தொழிற்பெயர்
எ .கா : அறிவறிந்த  மக்கட்  பேறு
      அவனுக்கு  என்ன  கேடு
வினையாலணையும்  பெயர்கள் :
  • வினை முற்று  வினையை  குறிக்காமல்  வினைச்  செய்தவனை குறிப்பது  வினையாலணையும்  பெயர் எனப்படும் 
  • எ .கா : முருகன்  பரிசு  பெற்றான்
          பரிசு  பெற்றானைப்  பாராட்டினர் .

பெயரெச்சம் :

  • முற்று  பெறாத எச்சவினைகள்  பெயரை  கொண்டு முடிந்தால்  அவை  பெயரெச்சம்  எனப்படும் .
  • பெயரெச்சம்  காலத்தால்  மூன்று  வகைப்படும் 
  • இறந்தகாலப்  பெயரெச்சம்
  • நிகழ்காலப்  பெயரெச்சம்
  • எதிர்காலப்  பெயரெச்சம் 
எ .கா :
படித்த  கயல்விழி 
சென்ற  கோதை 
 பெயரெச்சம்  இரு  வகைப்படும் :
  •  தெரிநிலைப்  பெயரெச்சம் : 
  • முக்காலத்தையும்  செயலையும்  வெளிப்படையாக  காட்டும் .
எ .கா : உண்ட  இளங்கோவன்
செய்பவன்  -  இளங்கோவன்
கருவி - கலம்
நிலம் -  வீடு 
காலம் - இறந்தகாலம் 
செய்பொருள் - சோறு
  • குறிப்பு  பெயரெச்சம் :
  • காலத்தையோ  செயலையோ  உணர்த்தாமல்  பண்பினை  மட்டும்  உணர்த்தி  நின்று  பெயர்ச்சொல்லை  கொண்டு  முடியும் .
  • எ .கா  :  நல்ல  பையன்

தன்மைப்  பெயர்கள் :(வேற்றுமை  உருபு  ஏற்கும்  பொது திரியும் - ஐ ,ஆல் , கு , இன் ,அது ,கண் )

  • நான் , யான்  - தன்மை ஒருமைப்  பெயர்கள் 
  • நாம் , யாம்  - தன்மை ஒருமைப்  பெயர்கள் 
    • "யான் "  என்னும்  தன்மை  ஒருமைப்   பெயர்  வேற்றுமை  உருபு  ஏற்கும் போது  "என் " எனத்திரியும்
 யான் +
 ஐ ->  என்னை 
 ஆல் ->  என்னால் 
 கு ->  எனக்கு 
 இன் ->  என்னின் 
 அது ->  எனது 
 கண் ->  என்கண்
Share:

Thodai

தொடை 


[ தொடை  - தொடுக்கப்படுவது , தொடை  - மாலை ]

மலர்களை  தொடுப்பது  போலவே  சீர்களிலும்  அடிகளிலும்  மோனை  முதலியன  அமைய தொடுப்பது  தொடை  எனப்படும் .

தொடை  எட்டு  வகைப்படும் :


  1. மோனைத் தொடை
  2. எதுகைத் தொடை
  3. முரண்த் தொடை
  4. இயைபுத் தொடை
  5. அளபெடைத்  தொடை
  6. இரட்டைத் தொடை
  7. அந்தாதித் தொடை
  8. செந்தொடை 

1.  மோனைத் தொடை:

  •  செய்யுளில்  அடிதோறும்  முதல் எழுத்து  ஒன்றிவர  தொடுப்பது  அடிமோனைத்  தொடை   எனப்படும் .
  • எ .கா :
ண்ணித்  துணிக  கருமம்  துணிந்தபின்
ண்ணுவம்  என்ப  திழுக்கு

2.  எதுகைத் தொடை:

  •  செய்யுளில்  அடிதோறும் முதலெழுத்து  அளவொத்து (ஓசையில் ) நிற்க  இரண்டாம்  எழுத்து  ஒன்றிவரத் தொடுப்பது  அடி எதுகை தொடை  எனப்படும் .
  • எ .கா :
ர  முதல  எழுத்தெல்லாம்  ஆதி
 பவன்  முதற்றே  உலகு.

3 முரண் தொடை :

  • செய்யுளில்  அடிதோறும் முரண்பட  தொடுப்பது  முரண்தொடை 
  • எ .கா :
 இன்பம்  விழையான்  இடும்பை  இயல்யென்பான் 
துன்பம்  உறுதல்  உலகு

4. இயைபுத் தொடை:

  •  செய்யுளில்  அடிதோறும்  இறுதிச்சீர்   ஒன்றிவர  தொடுப்பது  அடிஇயைபுத் தொடை   எனப்படும் .
  • எ .கா :
கொண்ட  கோபுரம்  அண்டையில்  கூடும்
 கொடிகள்  வானம்  படிதர மூடும் 
கண்ட பேரண்டத்  தண்டலை  நாடும்
கனக  முன்றில்  அனம்விளை  யாடும்

5.  அளபெடைத்  தொடை :

  • செய்யுளில்  அடிதோறும்  முதல்ச்சீர்  அளபெடுப்பது  அளபெடைத்  தொடை   எனப்படும் .
  • எ .கா :
கெடுப்பதூஉம்  கேட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே 
டுப்பதூஉம் எல்லாம்  மழை
 
Share:

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

Adi

அடி 


சீர்கள்  பல  அடுத்து  நடப்பது அடி  எனப்படும் 

அடி  5 வகைப்படும் :

  1. குறளடி 
  2. சிந்தடி 
  3. அளவடி 
  4. நெடிலடி 
  5. கழிநெடிலடி 

1. குறளடி :

  • அடிதோறும்  இருசீர்களைப்  பெற்று வருவது  குறளடி  எனப்படும் 
  • எ .கா :  

2.சிந்தடி  :

  •  அடிதோறும்  முச்சீர்களைப்   பெற்று வருவது  சிந்தடி   எனப்படும் 
  • எ .கா:  பழுதி லாத பயிர்த்தொழில் 
     பழுதி லாது  பயிற்றவே 

3.அளவடி :


  • அடிதோறும்  நான்கு சீர்களைப்   பெற்று வருவது  அளவடி (அ ) நேரடி   எனப்படும் 
  • எ .கா:  தாய்மொழி தாயினும்  தகவிற்  போற்றுவன் 
ஆய்மொழி  யாளர்தம்  அன்புக்கு  ஏற்றவன்

4. நெடிலடி :

  • அடிதோறும் ஐந்து  சீர்களைப்   பெற்று வருவது  நெடிலடி  எனப்படும் 
  • எ .கா : ஆடும்  கடைமணி  நாஅசை யாமல்  அகிலமெங்கும் 
     நீடும்  குடையைத்  தரித்த  பிராணிந்   நீள்நிலத்தில்

5.  கழிநெடிலடி :

  • அடிதோறும் ஆறு  அல்லது  அதற்கு  மேற்பட்ட  சீர்களைப்   பெற்று வருவது  கழிநெடிலடி(அ ) அறுசீர்க்கழிநெடிலடி   எனப்படும் 
Share:

வியாழன், 5 ஏப்ரல், 2018

Thalai

தளை (கட்டுதல் )

நின்ற  சீரின்  ஈற்றசையும் வரும்  சீரின்  முதலசையும் தளை  எனப்படும் . தளை  ஒன்றியும் வரும் , ஒன்றாமலும்  வரும் .

ஒன்றி வருவது :
  • நேர்  முன்  நேர்
  • நிரை  முன்  நிரை
ஒன்றாமல்  வருவது :
  •  நேர்  முன் நிரை
  • நிரை  முன் நேர்
தளை  ஏழு வகைப்படும்:

  1.  நேரொன்றாசிரியர்  தளை 
  2.  நிரையொன்றாசிரியர்  தளை 
  3.  இயற்சீர் வெண்டளை 
  4.  வெண்சீர் வெண்டளை 
  5.  கலித்தளை 
  6.  ஒன்றிய வஞ்சி  தளை 
  7.  ஒன்றாத வஞ்சி  தளை
 1. நேரொன்றாசிரியர்  தளை :( மா  முன்  நேர்  வருவது )
  • நேர்  - நேர்  சேர்ந்து  வந்தால்  நேரொன்றாசிரியர்  தளை
எ .கா : பா/ரி(நேர்  நேர் )  பா/ரி (நேர்  நேர் )
2.  நிரையொன்றாசிரியர்  தளை:
  • நிரை - நிரை  சேர்ந்து வருவதால் நிரையொன்றாசிரியர்  தளை
     எ .கா :பலர் /புகழ்  (நிரை /நிரை)
    கபி /லர்  (நிரை /நிரை)
3.இயற்சீர் வெண்டளை :
  • மா முன் நிரை (நேர்  முன் நிரை) விள  முன் நேர்   (நிரை  முன் நேர் ) வரும் 
  • எ .கா : அக/ர          முத/ல                       நில/ வரை        நீள்  /புகழ்
நிரை  நேர்     நிரை நேர்                நிரை /நிரை      நேர் /நிரை
புளிமா            புளிமா                       கருவிளம்        கூவிளம் 
4. வெண்சீர் வெண்டளை :
  • காய்  முன் நேர்  வருவது  வெண்சீர் வெண்டளை .(வெண்பாவிற்கு உரிய தளைகள் வெண்சீர் வெண்டளை ,இயற்சீர் வெண்டளை தவிர பிற தளைகள்  வராது )
  • எ .கா : யா / தா / னும்                          நா  / டா  / மால் 
நேர்   நேர்   நேர்                         நேர்   நேர்   நேர்  
தேமாங்காய்                               தேமாங்காய் 

 5.  கலித்தளை:
  •  காய்  முன்  நிரை  வருவது  கலித்தளை
  • எ .கா :      தா /  மரை ப் / பூ                       குளத் /தினி  /லே 
நேர் /நிரை /நேர்                      நிரை /நிரை /நிரை
கூவிளங்காய்                         கருவிளங்காய்
6. ஒன்றிய வஞ்சி  தளை:
  • கனி  முன் நிரை  வருவது ஒன்றிய வஞ்சி  தளை
  • எ .கா :    செந்  /தா  /மரைக்                   குளத் /தினி  /லே 
 நேர் நேர் நிரை                    நிரை /நிரை /நிரை
        தேமாங்கனி                            கருவிளங்காய்
7, ஒன்றாத வஞ்சி  தளை:
  •  கனி  முன் நேர்   வருவது ஒன்றாத வஞ்சி  தளை
  •  எ .கா :     வா   /னில் / வளர்                 திங்  / களன் / ன 
நேர் நேர் நிரை                      நேர் நிரை நேர்
 தேமாங்கனி                         கூவிளங்காய்
Share:

cheer

சீர் 
அசைகள்  தனித்தும்  இணைந்தும்  கூடி  அடிக்கு  உறுப்பாக  அமைவது சீர்  எனப்படும் .
  • ஓரசைச்சீர்
  •  ஈரசைச்சீர் 
  •  மூவசைச்சீர் 
  • நாலசைச்சீர் 
  1.  ஓரசைச்சீர்:
  • வெண்பாவின் ஈற்றில்  நேரசை , நிரையசை  ஏதேனும் ஒன்று தனித்து நின்று சீராய்  அமையும்.
எ .கா : நாள் (நேர் )
    மலர் (நிறை )
    காசு (நேர்பு )
    பிறப்பு (நிறைபு )
 2.ஈரசைச்சீர் : ( இயற்சீர்  (அ ) ஆசிரிய  உரிச்சீர் )
  •  இரண்டு அசைகள் சேர்ந்து ஒரு சீர்  ஆவது ஈரசைச்சீர்.
  • நேரில் முடியும்  சீர்கள் :
  • நேர்  + நேர்  = தேமா 
  • நிரை  + நேர்  = புளிமா
  • நிறையில்  முடியும் சீர்கள் :
  • நிரை +நிரை= கருவிளம் 
  • நேர் +நிரை = கூவிளம் 
3. மூவசைச்சீர் :
  •  மூன்று  அசைகள் சேர்ந்து ஒரு  சீர் ஆவது மூவசைச்சீர் 
  • நேரசையில்  முடியும் சீர்கள் :(வெண்பா  உரிச்சீர் )
  •  நேர்  நேர்  நேர்  = தே /மாங் /காய்
  •  நிரை  நேர்  நேர் = புளி  /மாங் /காய்
  •  நிரை  நிரை  நேர் = கரு /விளங் /காய்
  • நேர்  நிரை   நேர் = கூ  /விளங் /காய்
  • நிரையசையில்  முடியும் சீர்கள் ( வஞ்சியுரிச்சீர் )
  •  நேர் நேர் நிரை = தே /மாங் /கனி 
  • நிரை நேர் நிரை = புளி  /மாங் /கனி
  • நிரை நிரை நிரை = கரு /விளங் /கனி
  • நேர் நிரை நிரை =  கூ  /விளங் /கனி 
 4. நாலசைச்சீர் :(16)(பொதுச்சீர் ):

Share:

Ezhuthu, Asai

எழுத்து :

  • செய்யுளில் உயிர் (குறில் ,நெடில் ), மெய் , உயிர்மெய் (குறில் ,நெடில் ),ஆய்தம்  என்னும்  எழுத்துக்கள் முதன்மையாக கருதப்படும்.
அசை :
  • எழுத்து  தனியாகவோ பல  சேர்ந்தோ ஓசைப்பட அசைந்து (பிரிந்து ) நிற்பது அசை எனப்படும்.
நேரசை : 1.குறில்  தனித்ததும்  -க
2.குறில் ஒற்றடுத்தும்  - கல்
3.நெடில்  தனித்ததும்- கா 
4. நெடில் ஒற்றடுத்தும் - கால்
நிரையசை: 1. குறில்  இணைந்து - பட 
     2. குறில் ஒற்று  இணைந்து - படம் 
     3. குறில் நெடில் இணைந்து -படா 
     4. குறில் நெடில் ஒற்று  இணைந்து - படாம்
Share:

Amazon.in

Blogroll

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

Text Widget

model question 2012

TNPSC 2012  தமிழ் இலக்கணம்  1. 'ஆற்றீர் ' - வேர்ச் சொல்லை தேர்வு செய்  ஆற்றி  ஆற்றிய  ஆற்று  ஆற்றுதல்  2. பின...

இந்த வலைப்பதிவில் தேடு

Blogroll

Pages - Menu

Blogger Pages

Blogger templates

captain_jack_sparrow___vectorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Popular Posts

Recent Posts

Unordered List

Definition List

Ads Here

Pages

Theme Support